Ilaiyaraaja: இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சரிகம தொடர்ந்த வழக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு

  • டெல்லி: பதிப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை கோரியும், இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் சரிகம இசை நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக சரிகம இசை நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சரிகம நிறுவனத்திற்கு சொந்தமான காப்புரிமை பெற்ற பாடல்களை இளையராஜாவோ, அவரது பிரதிநிதிகளோ பயன்படுத்தவோ, உரிமை வழங்கவோ அல்லது மூன்றாம் நபர்களிடம் உரிமை கோரவோ இடைக்கால தடை விதித்து இருந்தது.

    Advertisement

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

    இந்த தடையை நீக்கக் கோரி இளையராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனாலும் கூட இளையராஜா நீதிமன்ற உத்தரவை மீறி அவர்களது பாடல்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சரிகம நிறுவனம் தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

    டெல்லி உயர் நீதிமன்றத்தின் தடையை மீறி இளையராஜா தொடர்ந்து பாடல்களுக்கு உரிமை கொண்டாடி வருவதாகவும், அதனை வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டி சரிகம இசை நிறுவனம் சார்பில் இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டது. இதில், யூடியூப் போன்ற டிஜிட்டல் தலங்களிலும் தங்களுக்கு சொந்தமான பாடல்களை இளையராஜா தரப்பு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

    Advertisement

    நிலையான தடை உத்தரவு போட வேண்டும்

    இதனால் தங்களுக்கு மிகப்பெரிய அளவில் வணிக ரீதியிலாக பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும், அது சம்பந்தமான சான்றுகள் மற்றும் ஆவணங்கள், ஆதாரங்களை டெல்லி உயர் நீதிமன்றத்தில் சரிகம நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே முரட்டுக்காளை என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு குறிப்பிட்ட பாடல் விவகாரத்தில் இளையராஜா தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பியதையும் சரிகம நிறுவனம் சுட்டிக்காட்டியதோடு, அதே போன்று எங்கள் வழக்கிலும் விரிவான விசாரணை நடத்தி எங்களது எந்த ஒரு பாடலையும் இளையராஜா தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருக்க நிலையான தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    Advertisement

    சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்

    இதுவரை அவர் பயன்படுத்தியதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்து அதிகாரியை நியமித்து அதனை விற்பனை செய்ய வேண்டும் என மனு அளித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இளையராஜா விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    English Summary

    Ilaiyaraaja; Saregama had filed a petition with the Delhi High Court seeking contempt of court proceedings against Ilaiyaraaja for violating a copyright order and requesting the attachment of his assets. Upon hearing the matter, the Delhi High Court ordered that a notice be issued to music composer Ilaiyaraaja.