மனித உயிர் விலைமதிப்பற்றது.. வாங்சுக் காப்பற்ற என்ன நடவடிக்கை எடுத்து இருக்கீங்க? ஐகோர்ட் கேள்வி

  • டெல்லி: நீட் முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே சோனம் வாங்சுக்கிற்கு கட்டாய சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

    Advertisement

    கரப்பான் பூச்சி ஜனதா நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு சோனம் வாங்சுக் கடந்த 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதற்கிடையே அவரது உயிரைக் காப்பாற்ற அவசர மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுநல மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

    சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ராகேஷ் குமார் சைனி என்பவர் இதைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்.. 59 வயதான வாங்சுக் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் அடுத்த 48 மணி நேரத்தில் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும், அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்து உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. தேவைப்பட்டால் கட்டாய சிகிச்சை தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    அந்த மனுவில் மேலும், "சோனம் வாங்சுக் சுமார் 8.5 கிலோ உடல் எடையை இழந்துள்ளார். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. ஆனால் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த உண்ணாவிரதத்தின் போது வாங்சுக் உயிரிழந்தால் அது நாட்டிற்கே அவமானமாக மாறும்" என குறிப்பிட்டிருந்தார்.

    Advertisement

    சரமாரி கேள்வி

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம், வாங்சுக்கின் உடல்நிலையை கண்காணிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மேத்தா, தினசரி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சில நாட்களில் அரசு மருத்துவர்களும், சில நாட்களில் தனியார் மருத்துவர்களும் பரிசோதனை செய்வதாகவும் தெரிவித்தார்.

    விசாரணையின்போது, எந்த ஒரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது என குறிப்பிட்ட டெல்லி ஐகோர்ட், சோனம் வாங்சுக்கின் உயிரைக் காப்பாற்றத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அனைத்தையும் அரசு செய்ய வேண்டும் என்றது. நீதிபதிகள் மேலும், "சோனம் வாங்சுக்கை அரசு மருத்துவர்கள் தினமும் பரிசோதிக்க வேண்டும். அவர்களின் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். மனித உயிர் மிகவும் முக்கியமானது" என்றனர்.

    Advertisement

    சோனம் வாங்சுக்

    இதற்கு நடுவே நீதிமன்ற உத்தரவுக்கு சில மணி நேரங்களுக்கு சோனம் வாங்சுக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "பல நாட்களாகச் சாப்பிடாமல் இருந்தால் உடல்நிலை எப்படி இருக்குமோ.. அதுபோல தான் இருக்கிறது. உடல் பலவீனம் இருக்கிறது. தசைகள் சோர்வடைந்துள்ளன. ஆனால் மன உறுதியும் குறையவில்லை" என்றார்.

    கோரிக்கை

    மேலும், உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தாலும், அரசிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் போராட்டத்தை நிறுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னை உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க சொல்வதற்கு பதிலாக ஜூலை 20ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Delhi High Court has directed the govt to appoint a doctor to monitor activist Sonam Wangchuk(சோனம் வாங்சுக் உடல்நிலை குறித்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு): Sonam Wangchuk latest news in tamil.