குளியல் உடையுடன் டெல்லி மெட்ரோவில் ஏறிய பெண்! சுற்றிலும் குறுகுறுனு பார்த்த கண்கள்.. ரயிலா? பார்லரா?

  • டெல்லி: வீட்டில் குளித்துவிட்டு, தலைக்கு துண்டை கட்டிக்கொண்டு, முகத்துக்கு மேக்கப் போட்டு கொண்டிருக்கும் நேரத்தில் யாராவது மெட்ரோ ரயிலில் வந்து உட்கார்ந்தால் எப்படி இருக்கும்? அதுவும் சாதாரண உடையில் இல்லாமல், பாத்ரோப் அணிந்து, காலில் பாத்ரூம் செருப்புடன், கண்களுக்குக் கீழே பேட்ச் ஒட்டிக்கொண்டு பயணம் செய்தால்?? இப்படியொரு பெண்ணின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பொது இடத்தில் என்ன உடை அணியலாம் என்ற விவாதத்தையும் இப்போது கிளப்பி விட்டுள்ளது.

    Advertisement

    வெள்ளை நிற பாத்ரோப் அதாவது குளியல் உடை, தலையில் சுற்றிய துண்டு, கண்களுக்குக் கீழே அழகுப் பராமரிப்புக்கான பேட்ச் ஒட்டியபடி அந்த பெண் காணப்பட்டார்.. இந்த குளியல் உடையுடன், தலைக்கு சுற்றப்பட்ட டவலுடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தபடியே, தன்னுடைய சரும பராமரிப்பு வழக்கத்தையும் மேற்கொண்டார்

    Advertisement

    குளியல் உடை, தலையில் துண்டு

    இப்படி ஒரு பெண் டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் உட்கார்ந்திருந்ததை பார்த்ததுமே பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்... ஒருவர் இதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்தார்.. @HaramiParindey என்பவர் இந்த வீடியோவை அக்டோபர் 8-ம் தேதி எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ளார்..

    "இந்திய மெட்ரோக்களில் தினமும் இதைவிட வித்தியாசமான விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன" என்ற பொருளில் போஸ்ட் செய்திருந்தார்.. அந்த வீடியோ இன்னமும் வைரலாகி கொண்டேயிருக்கிறது.

    குளியல் உடையில் அந்த பெண் உட்கார்ந்திருந்தபோது, அவருக்கு பக்கத்திலும், அருகிலும் உள்ள பயணிகள், அப்பெண்ணை வித்தியாசமாக பார்க்கிறார்கள்.. இதுவும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

    Advertisement

    இது மெட்ரோ ரெயிலா? அல்லது பியூட்டி பார்லரா?

    இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், "இது மெட்ரோ ரெயிலா? அல்லது பியூட்டி பார்லரா? பொது இடத்துக்கு வரும்போது அதற்கேற்ற டிரஸ் அணிந்து வரக்கூடாதா? இதுவே எங்கள் வீட்டு பெண்ணாக இருந்தால், மெட்ரோவில் பயணம் செய்யும்போது இப்படிச் செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுப்பேன்..

    தனிப்பட்ட இடம் வேறு, பொதுமக்கள் கூடும் இடம் வேறு, அந்த பெண் யார்? எதற்காக இப்படி உடையணிந்து வந்தார்? இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வந்தாரா? பொது இடத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படிச் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்" என்று காட்டமாக கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்..

    Advertisement

    டிரஸ் அணிந்து மெட்ரோ

    ஆனால், இன்னொரு தரப்பினர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். அவர் என்ன உடை அணிந்தால் மற்றவர்களுக்கு என்ன பாதிப்பு? இந்த டிரஸ் அணிந்து மெட்ரோவில் ஏறி பயணித்ததால், அவர் எந்த ரூல்ஸை மீறிவிட்டார்? அந்தப் பெண்ணை மற்ற பயணிகளின் ஏன் இப்படி முகம் சுழித்து பார்க்கிறார்கள்? நியூயார்க் அல்லது லண்டன் மெட்ரோவில் இதேபோல ஒருவர் வந்தால், இவ்வளவு தூரம் தவறாக பார்க்க மாட்டார்கள் என்று சப்போர்ட் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இதற்கு நடுவில் சில இணையவாசிகள், "நாமெல்லாம் வேஸ்ட்.. வாழ்க்கையில் இப்படியெல்லாம் செய்யாமல் வீணாக இருந்துவிட்டோமே" என்று கிண்டலடித்துள்ளார்.

    Advertisement

    டெல்லி மெட்ரோ வார்னிங்

    ஆனால், டெல்லி மெட்ரோவில் இப்படியான அநாகரீக செயல்கள் நடப்பது சமீப காலமாகவே அதிகரித்தபடி வருவது வேதனைக்குரியது.. இனி இதுபோல் நடக்க கூடாது என்பதற்காகத்தான் டெல்லி மெட்ரோ நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது..

    "பயணிகள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது அடிப்படை ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வார்னிங் தந்தபடியே உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Delhi Metro Viral Video.. Woman in Bathrobe Sparks Buzz, Is It a Train or Beauty Parlour?