நேருக்கு நேர் கேள்வி.. சப்பென அறைவிட்ட பாஜக எம்எல்ஏ! நேரலையில் ஷாக் சம்பவம்!

  • டெல்லி: சாலை பணிகளை டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஸ் வர்மா ஆய்வு செய்திருந்தார். அப்போது அவருக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்வுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. ஒரு கட்டத்தில் டென்ஷனான பர்வேஸ் வர்மா, எதிர் தரப்பில் இருந்த இளைஞர் ஒருவரை சப்பென அறைந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

    Advertisement

    மேற்கு டெல்லியின் திலக் நகர் பகுதியில் சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பகுதியில் ஆய்வுக்காக பர்வேஸ் போயிருக்கிறார். அதே பகுதிக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங்கும் வந்திருக்கிறார்.

    Advertisement

    எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்றால் அங்கு ஏழரை இருக்கிறது என்று அர்த்தம். டெல்லியிலும் அதுதான் நடந்தது. புதுசா ரோடு போடுறாங்கலாம்.. பாருங்க தார் எப்படி பெயர்ந்துக்கிட்டு வருதுனு.. எம்எல்ஏ ஜர்னைல் காட்ட.. அவ்வளவுதான் ரெண்டு எம்எல்ஏக்களுக்கும் நடுவே வாக்குவாதம் வெடித்தது.

    ரெண்டு பேரும் மாறி மாறி திட்டிக்கொண்டிருக்கையில், நடுவே புகுந்த சாஹிப் சிங் என்கிற இளைஞர் மும்முரமாக அந்த சண்டையை வீடியோ எடுக்க தொடங்கிவிட்டார். இவர் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங்கின் சோஷியல் மீடியா பேஜை ஹாண்டில் செய்பவர்.

    Advertisement

    பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும்போது உள்ளே புகுந்து ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்து டென்ஷனான பாஜக எம்எல்ஏ பர்வேஸ், யார் என்ன என்று தெரியாமல் இளைஞர் சாஹிப் சிங்குக்கு சப்பென ஒரு அறை விட்டிருக்கிறார். உடனே அந்த இளைஞர் திருப்பி தாக்க முயல.. அந்த இடமே களேபரமாகிவிட்டது. எம்எல்ஏக்களின் பாதுகாவலர்கள் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

    இது தொடர்பான மொத்த வீடியோவும் சோஷியல் மீடியாக்களில் பயங்கரமாக ஷேராகி வருகிறது. பலரும் பாஜக எம்எல்ஏவை திட்டி வருகின்றனர். பொதுமக்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லையா? எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும்.. அவரிடம் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    இந்த விவகாரம் தொடர்பாக இளைஞர் சாஹிப் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்திருக்கிறார். பதிலுக்கு எம்எல்ஏ தரப்பும் புகார் கொடுத்திருக்கிறது. என் குடும்பத்தை பற்றி அவதூறாக பேசினார்.. அதனால்தான் அடித்தேன் என்று எம்எல்ஏ தரப்பு சொல்லியிருக்கிறது. இந்த சம்பவம் மொத்த டெல்லியிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    English Summary

    Delhi Minister: Delhi Public Works Department Minister Parvesh Verma was inspecting roadworks when an argument broke out between him and an Aam Aadmi Party (AAP) MLA. At one point, losing his temper, Parvesh Verma suddenly slapped a young man from the opposing side. A video of the incident is being widely shared on social media.