இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த கூடாது.. டெல்லி போலீஸ் திடீர் தடை.. உச்சக்கட்ட குழப்பம்

  • டெல்லி: தலைநகர் டெல்லியில் இனி ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தக்கூடாது என டெல்லி போலீஸ் தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக, போராட்டங்களை நடத்த மூன்று மாற்று இடங்களை அறிவித்துள்ளனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட்டங்களை அறிவித்திருந்த நிலையில், டெல்லி போலீசார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுக்க தீவிரமடைந்து வருகிறது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும் கரப்பான் பூச்சி கட்சி போன்ற அமைப்புகளும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். இதனால் மத்திய அரசுக்கு அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    Advertisement

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    இன்றைய தினம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதால், டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், போராட்டங்களுக்கான இடங்களை மாற்றி டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    கரப்பான் பூச்சி கட்சியினர் ஜந்தர் மந்தரில் தான் போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தனர். நீட் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள் அங்கு நடந்திருந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களையும் அதே இடத்தில் நடத்த கரப்பான் பூச்சி கட்சி திட்டமிட்டிருந்தது. இருப்பினும், போராட்டத்திற்கு முன்பே சனிக்கிழமை கரப்பான் பூச்சி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை

    அவர்கள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த ரெடியாகி வருகிறார்கள். இதற்கிடையே ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்களை நடத்த அனுமதி இல்லை என டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் வெளியிட்ட உத்தரவில்.. டெல்லியில் போராட்டங்கள் நடத்துவதற்காக மூன்று இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஜந்தர் மந்தரில் போராட்டம் நடக்காது.. நீதிமன்றத்தில் உறுதியாக சொன்ன மத்திய அரசு! பிளான் மாறுது!

    3 இடங்கள்

    ராம்லீலா மைதானம்: பழைய டெல்லியில் அமைந்துள்ளது. ஜந்தர் மந்தரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
    சிபிடி மைதானம்: கிழக்கு டெல்லியில் அமைந்துள்ளது. ஜந்தர் மந்தரில் இருந்து சுமார் 13.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
    புராரி மைதானம்: வடக்கு டெல்லியில் அமைந்துள்ளது. ஜந்தர் மந்தரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் உள்ளது.

    Advertisement

    முன்னதாக 2022 ஏப்ரல் மாதம் போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் ஜந்தர் மந்தர் போராட்டங்கள் நடத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட இடமாக இருந்தது.. அந்த பட்டியலில் இருந்து தான் இப்போது ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டுள்ளது. புதிய இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான விதிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    டெல்லியில் சிஜேபி இன்று போராட்டம்.. யாரும் தடையை மீறாதீங்க.. ஜந்தர் மந்தரில் குவிந்த போலீஸ் வார்னிங்

    மோதல்

    டெல்லி ஜந்தர் மந்தரில் முறையில் போராட்டம் நடத்த அனுமதி கோருவது தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி மற்றும் டெல்லி போலீசார் இடையே மோதல் நீடித்து வருகிறது. தங்களது போராட்டத்துக்கு தேதி ஒதுக்க வேண்டும் என்றும் அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் கரப்பான் பூச்சி கட்சியினர் வலியுறுத்தினர்.

    Advertisement

    தங்களது போராட்டம் குறித்து போலீசாருக்கு முறையாகத் தகவல் தெரிவித்ததாகவும், அந்த தகவலை போலீசார் ஏற்று கொண்டதாகவும் கரப்பான் பூச்சி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறினார். இருப்பினும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கான விளக்கமும் தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    English Summary

    Delhi Police has removed Jantar Mantar from the list of designated protest venues and announced three alternative locations(ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் தடை): Delhi Police Bans Protests at Jantar Mantar news in tamil.