உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசு.. நீதிபதிகளிடம் சொன்ன காரணத்தை பாருங்க!

  • டெல்லி: CJP போராட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவது, போக்குவரத்தை மாற்றுவது என மக்களை பாதிக்கும் செல்களை செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உத்தரவை மத்திய அரசு மதிக்கவில்லை. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் உத்தரவை அமல்படுத்தாதது குறித்து நீதிமன்றத்தில் மத்திய அரசு தற்போது விளக்கமளித்துள்ளது.

    Advertisement

    அக்.10 அன்று காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் எதிர்க்கட்சிகள் அறிவித்த போராட்டங்களின் போது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதை தடுக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    Advertisement

    கடந்த காலங்களில் அனுமதியின்றி 36 நாட்களுக்கும் மேலாக நீடித்த நீட் தேர்வு முறைகேடு எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் ஜூலை 20 அன்று நடந்த நாடாளுமன்ற நோக்கிய பேரணியின்போது நடந்த வன்முறைகளை சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக டெல்லி போலீஸ் கூறியுள்ளது. 18வது பிரிக்ஸ் மாநாடு மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகை காரணமாக பல இடங்களில் 144 தடை உத்தரவு போல தடை போடப்பட்டிருந்தாலும், உச்சநீதிமன்றத்தின் அக்.11 உத்தரவுக்கு பிறகு அவை நீக்கப்பட்டன.

    அக்.9ம் தேதி இரவு முதல் 57 மெட்ரோ நிலையங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அக்.10 அன்று முழுமையாக திரும்பப் பெறப்படடன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 88 மாற்று வழிப் பலகைகள் வைக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் போக்குவரத்து தகவல்கள் வழங்கப்பட்டன.

    Advertisement

    தடையை மீறியவர்கள் மட்டுமே தற்காலிகமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பத்திரிகையாளர்கள் அல்லது வழக்கறிஞர்கள் எவரும் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்படவில்லை என்றும் காவல்துறை கூறியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு காரணமாக மொபைல் இன்டெர்நெட் சேவைகள் மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், பிராட்பேண்ட் போன்ற பிற இணைய வசதிகள் எவ்வித தடையும் இல்லாமல் செயல்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    என்னதான் காவல்துறை விளக்கமளித்தாலும், நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாதது ரொம்பவே சீரியஸான மேட்டராக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் இப்படியெல்லாம் செய்யும் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். எனவேதான் முன்னெச்சரிக்கையாக இப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவை அமல்படுத்தாமல், அதற்கான காரணத்தை போலீஸ் தெரிவித்திருப்பதை நீதிமன்றம் எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறது? என்பது கேள்வியாக இருக்கிறது.

    English Summary

    Delhi Police: The Supreme Court had directed that, while taking measures to control the CJP protests, authorities should refrain from actions that inconvenience the public—such as closing metro stations or diverting traffic. However, the Central government did not comply with this directive, leading to the filing of a contempt of court case. In this context, the Central government has now provided an explanation to the court regarding its failure to implement the order.