நாளை கரப்பான்பூச்சி போராட்டத்துக்கு அனுமதியில்லை.. மீறினால் அவ்வளவுதான்.. டெல்லி போலீஸ் வார்னிங்

  • டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. இதற்கு டெல்லி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கப்படவில்லை என்று டெல்லி இணை காவல் ஆணையர் நுபுர் பிரசாத் தெரிவித்துள்ளதோடு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு வார்னிங்கும் கொடுத்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக டெல்லி இணை காவல் ஆணையர் நுபுர் பிரசாத் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    Advertisement

    ''கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த சவ்ரவ் தாஸ் போராட்டத்துக்கு கடந்த 6ம் தேதி அனுமதி கோரி விண்ணப்பம் செய்தார். டெல்லி காவல்துறையை பொறுத்தவரை 10 நாட்களுக்கு முன்பாக போராட்டத்துக்கு அனுமதி கோர வேண்டும் என்பது தான் நடைமுறையாக உள்ளது.

    ஆனால் குறித்த காலத்துக்குள் அனுமதி கோராததால் நாளை டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு அனுமதியில்லை. இதற்கு மன்பு ஏற்கனவே கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கான வழிக்காட்டுதல்களை மீறி உள்ளது. இது தொடரும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்று கூறியுள்ளார்.

    English Summary

    The 'Cockroach Janta Party' has announced a protest for tomorrow at Delhi's Jantar Mantar, demanding the resignation of Indian Election Commissioner Gyanesh Kumar. While the party sought permission from the Delhi Police for the event, Delhi Joint Commissioner of Police Nupur Prasad stated that permission has not been granted and issued a warning to the party.