மாணவர்களின் அடிமடியிலேயே கைவைக்கும் போலீஸ்..டெல்லியில் வன்முறை செய்தால் அவ்வளவு தான்! பெரிய ‘செக்'

  • டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்துவோர் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் வெளிநாட்டில் படிப்பு, வேலை உள்ளிட்ட கனவுகளில் இருப்போர் அதிக கவனமுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    'நீட்' தேர்வு முறைகேடுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    இதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. கடந்த 21ம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி புறப்பட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீசார், அதிரடி படையினர் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இருப்பினும் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நாளை நாடு முழுவதும் மாவட்டங்கள் தோறும் அமைதியாக போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. நாளுக்கு நாள் வலுத்து வரும் இந்த போராட்டம் மத்திய பாஜக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி டெல்லியில் தற்போது நாடாளுமன்றம் நடந்து வரும் சூழலில் அங்கு தொடரும் போராட்டம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    அதுமட்டுமின்றி தற்போதைய போராட்டம் வன்முறையாக மாறுவதை தடுக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதோடு, நாடாளுமன்றம், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களின் இல்லங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வரலாம்? என்பது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் டெல்லி போலீசாருக்கு இன்று சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த காவல் ஆணையர் அனுராக் குமாருக்கு, துணை நிலை ஆளுநர் தர்ன்ஜித் சிங் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை டெல்லி காவல் ஆணையரால் அக்டோபர் 18 ம் தேதி வரை பயன்படுத்த முடியும். இது அமலாகும் பட்சத்தில் ஒருவரை காரணம் இன்றி 3 மாதம் வரை சிறையில் அடைக்க முடியும். இதன் அடுத்தக்கட்டமாக தான் டெல்லி போலீசார் இன்னொரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    Advertisement

    அதாவது போராட்டக்காரர்கள் அமைதியை கைவிட்டு வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை ஒரு பக்கம் எடுத்தாலும் கூட பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வன்முறையாளர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கு தேவையான பணியை டெல்லி போலீசார் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதனால் டெல்லியில் போராட்டம் நடத்துவோர் அமைதியான முறையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே தப்பிக்க முடியும். குறிப்பாக வெளிநாட்டில் படிப்பு, வேலைவாய்ப்பு கனவில் உள்ளவர்கள் வன்முறை செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் சிக்கல் ஏற்படும்.

    English Summary

    Delhi Cockroach Janta Party Protest: Delhi Police Police says that anyone found involved in rioting during the NEET protests will face strict legal action. Authorities also plan to initiate proceedings for the cancellation of passports of those identified as participating in the violence.