விரிக்கப்பட்ட முள்பட்டைகள்.. டெல்லி சாலையை கவனிச்சீங்களா.. கடும் ஆக்‌ஷனில் போலீஸ்

  • டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தை இன்று முறியடிக்க வேண்டு்ம். ஒருவரை கூட ஜந்தர் மந்தருக்குள் நுழைவிடக்கூடாது என்பதில் டெல்லி போலீசார் உறுதியாக உள்ள நிலையில் சாலைகளில் முள்பட்டைகள் விரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது.

    Advertisement

    தலைநகர் டெல்லி.. இன்று காலை முதல் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. திரும்பும் திசையெங்கும் போலீசார், துணை ராணுவம், அதிவிரைவு படையினர் குவிக்கப்ட்டுள்ளனர். கைகளில் லத்தி மற்றும் பாதுகாப்பு கவசம் வைத்து கொண்டு அவர்கள் கம்பீரமாக வலம் வருகின்றனர்.

    Advertisement

    முக்கிய சந்திப்புகளில் மூன்றாம் கண்ணாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போலீசாரும் தங்களின் யூனிபார்மில் கேமரா பொருத்தி உள்ளனனர். டெல்லி ஜந்தர் மந்தர், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உள்பட முக்கிய இடங்களை சுற்றி பலஅடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இரும்பு கோட்டையான டெல்லி.. கரப்பான்பூச்சி கட்சியினர் சாதாரணமாக நுழைய முடியாது.. டாப் 10 பாயிண்ட்

    டெல்லிக்குள் ரயில்கள் வர தடை செய்யப்பட்டுள்ளதோடு, 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரை சுற்றி 4 கிலோமீட்டர் தொலைவுக்கு இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஜந்தர் மந்தர் ஏரியாவை நோக்கி செல்லும் இளைஞர்கள் அடுத்தடுத்து கைது என இப்படி டெல்லி பரபரப்பாக மாறி இருக்க முக்கிய காரணம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்த போராட்டம் தான்

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ரெடியாகி உள்ளனர். இதனை தடுக்க தான் இத்தனை ஏற்பாடுகள்.

    அதன்படி டெல்லி - பதார்பூர் எல்லையில் உள்ள மோகன்எஸ்டேட் சாலையில் முள்பட்டைகள் வைக்கப்பட்டுள்னள. அதேபோல் டெல்லி எல்லையில் பிற இடங்களிலும் இந்த முள்பட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    இதன்மூலம் வெளியிடங்களில் இருந்து போராட்டக்காரர்கள் வாகனங்களில் டெல்லி வர முடியாது. தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றால் இந்த முள் பட்டைகள் பாதுகாப்பு கவசமாக இருக்கும். வாகனங்களின் டயர்களை பஞ்சராக்கிவிடும். இதனால் தான் டெல்லி சாலையில் இந்த முள்பட்டைகள் வைக்கப்பட்டு உள்ளது.

    தூரம் நில்லுங்கள்.. டெல்லி போராட்டத்தில் ஏதோ பெருசா நடக்கப்போகுது? பத்திரிகையாளருக்கு போலீஸ் தந்த அட்வைஸ்

    நம் நாட்டில் இதற்கு முன்பு காஷ்மீரில் நடந்த போராட்டம், 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் உள்ளிட்டவற்றில் இத்தகைய முள்பட்டைகள் பயன்படுத்தப்பட்டது. விவசாயிகள் போராட்டத்தின்போது சிங்கு, திக்கு, காசிப்பூர் எல்லைகளில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    Advertisement

    அதன்பிறகு இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்றைய போராட்டத்தை டெல்லி போலீசார் மிகவும் சீரியஸாக எடுத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Delhi Protest: The protest by the 'Cockroach Janta Party' must be thwarted today. With the Delhi Police determined not to allow a single person to enter Jantar Mantar, and barbed wire laid out on the roads, videos and photos related to this are circulating online.