முதல் டார்கெட் கோயில் தான்! டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு.. கடைசி நொடியில் மாறிய பிளான்

  • டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு பயங்கர கார் வெடிப்பு நடந்தது. செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்ஏஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அதில் பல பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அந்த நபர் முதலில் ஜெயின் கோயிலை குறிவைத்ததாகவும் அங்கு போலீஸ் நடமாட்டம் அதிகமாக இருந்தாலேயே இலக்கை மாற்றியதும் தெரிய வந்துள்ளது.

    Advertisement

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நடந்த கார் குண்டுவெடிப்பில், தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய மருத்துவர் உமர் உன் நபி, வெடிகுண்டு தயாரிக்க சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்தெடுத்திருக்கலாம் என தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. கடந்த 2025 நவம்பர் 10ம் தேதி நடந்த இந்த குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

    Advertisement

    குற்றப்பத்திரிக்கை

    உமர் உன் நபி தொடர்பாக சாட்சிகளின் வாக்குமூலங்களையும் தடயவியல் ஆதாரங்களையும் என்ஐஏ சேகரித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட i20 காரை முதலில் ஜெயின் கோயிலான லால் மந்திர் அருகே நிறுத்த நபி முயன்றதும் விசாரணையில் தெரியவந்ததாக என்ஐஏ கூறியுள்ளது.

    குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் வரை சுமார் 11 நாட்கள் நுஹ் பகுதியில் வாடகை அறையில் நபி தங்கியிருந்ததாக அருகில் வசித்த ஒருவர் அளித்த வாக்குமூலத்தை என்ஐஏ குறிப்பிட்டுள்ளது. அந்த அறையில்தான் அவர் வெடிபொருட்களை தயாரித்திருக்கலாம் என என்ஐஏ சந்தேகிக்கிறது.

    Advertisement

    யூரியா நைட்ரேட்

    நபி மற்றும் மற்றொரு சந்தேக நபரான ஷஹீன் சயீத் ஆகியோருக்கு சொந்தமான பென் டிரைவ்களில் இருந்த ஆவணங்களிலும் யூரியா நைட்ரேட் மூலம் வெடிபொருள் தயாரிக்கும் முறை தொடர்பான தகவல்கள் இருந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. மேலும், சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்தெடுப்பதற்கான முறையும் அந்த ஆவணங்களில் விளக்கியுள்ளனர்.

    மேலும், நபியின் அறையில் சிறுநீர் நிரப்பப்பட்ட பாலித்தீன் பை இருந்ததாகவும், அதனால் அறையில் கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும் ஒரு பெண் சாட்சி தெரிவித்ததாக என்ஐஏ கூறியுள்ளது. இது குறித்து அந்த பெண் நபியின் நண்பரான ஷோயிப்பிடமும் புகார் தெரிவித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    ஜெயின் கோயில்

    நபி முதலில் லால் மந்திராக அருகே தான் காரை நிறுத்த திட்டமிட்டிருந்தாராம். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜெயின் கோயிலான லால் மந்திர் அருகே காரை நிறுத்தினால் அதிக சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதே அவரது திட்டமாக இருந்துள்ளது. இருப்பினும், டெல்லியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் போலீஸ் கண்காணிப்பு காரணமாக கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றியிருக்கலாம் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

    நபி சுமார் மாலை 6.37 மணியளவில் சுன்ஹரி மசூதி பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியேறியதாகவும், காரை ஓட்டி சென்று லால் மந்திர் அருகே நிறுத்த முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்ததாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது. ஆனால் அங்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் போலீஸ் இருந்ததை தொடர்ந்து அவர் காரை திருப்பி செங்கோட்டை நோக்கி சென்றதாகவும், அதன்பிறகு மாலை 6.50 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

    Advertisement

    12 முறை செங்கோட்டை

    குண்டுவெடிப்புக்கு முன்பு 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் நபி 12 முறை செங்கோட்டைக்கு சென்றிருந்ததாகவும் என்ஐஏ கூறியுள்ளது. குண்டுவெடிப்புக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது மே 1ம் தேதி அவர் கடைசியாக செங்கோட்டைக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வெறுமன சுற்றி பார்க்க மட்டுமில்லாமல்.. தாக்குதலுக்கு திட்டமிடுவதற்கான இடத்தை ஆய்வு செய்யும் நடவடிக்கையாகவே அவர் அங்கு சென்றதாக என்ஐஏ சந்தேகிப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோல வேவு பார்க்க செல்லும்போது நபியும் அவரது கூட்டாளிகளும் செல்போன்களை அணைத்து வைத்திருந்ததாகவும், டிஜிட்டல் பதிவுகளை மறைக்க இதுபோல செய்திருக்கலாம் என்றும் என்ஐஏ சந்தேகம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    புதிய ஆடைகள்

    நுஹ் பகுதியில் இருந்தபோது நபி, ஷோயிப்பின் உறவினர் ஒருவருடன் சென்று புதிய ஆடைகளையும் வாங்கியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. டி-ஷர்ட், வெள்ளை சட்டை மற்றும் கார்கோ பேன்ட் ஆகியவற்றை அவர் பணம் கொடுத்து வாங்கியதாகவும், இந்த கொள்முதல் விவரங்களும் விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக இருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

    English Summary

    NIA chargesheet in the 2025 Delhi Red Fort car blast case has revealed new details about the alleged planning and movements of Umar Un Nabi(டெல்லி செங்கோட்டை வெடிப்பு செய்திகள்): Delhi Red Fort Blast NIA Chargesheet latest news in tamil.