நீல நிறத்தில் மாறும் உதடுகள்.. இந்தியாவை அலறவிடும் பன்றி காய்ச்சல்.. கொரோனாவை விட மோசம்?

  • டெல்லி: டெல்லியில் ஸ்வைன் ஃப்ளூ எனப்படும் பற்றி காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 1,777 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா இது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார். திடீரென நாட்டில் பன்றி காய்ச்சல் அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    நமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இப்போது பன்றி காய்ச்சல் திடீரென வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் மட்டும் 1777 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தளவுக்கு வேகமாக பரவி வருவதால் நிலைமை கையை மீறி சென்றுவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    எச்சரிக்கை

    இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கொரோனா போல பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், மற்றவர்களுக்கு வேகமாக பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    ஆனால் பன்றி காய்ச்சலும் கொரோனா வைரசும் ஒரே போல பரவாது என்பதே அறிவியல் பூர்வமான உண்மை! 2009ஆம் ஆண்டு பன்றி காய்ச்சல் R0 வேரியண்ட் பரவல் விகிதம் பொதுவாக 1.3 முதல் 1.7 வரை இருந்தது. அதாவது, பாதிக்கப்பட்ட ஒருவர் சராசரியாக ஒன்று முதல் இரண்டு பேருக்கு வைரஸை பரப்பினார். ஆனால், கொரோனாவின் R0 விகிதம் 2.5ஆக இருந்தது.

    Advertisement

    பன்றி காய்ச்சல்

    பன்றி காய்ச்சல் எனப்படும் H1N1 வைரஸ் முதன்முதலில் 2009ஆம் ஆண்டு மெக்சிகோவில் அடையாளம் காணப்பட்டது. இதன் மரபணு அமைப்பு பல்வேறு வைரஸ்களின் கலவையாக இருந்தது. பன்றிகள், பறவைகள் மற்றும் மனிதர்களில் தனித்தனியாக சுற்றி வந்த இன்ஃப்ளூயன்சா வைரஸ்களின் மரபணு பகுதிகள் ஒன்றிணைந்து புதிய வடிவத்தை உருவாக்கியதாக ஆய்வுகள் தெரிவித்தன.

    இதன் காரணமாக ஆரம்பத்தில் ஸ்வைன் ஃப்ளூ அதாவது பன்றி காய்ச்சல் என இது அழைக்கப்பட்டது. பின்னர் உலக சுகாதார அமைப்பு இதை Influenza A(H1N1) 2009 என பெயரிட்டது. 2009 ஜூன் 11ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு தொற்றுநோயாக அறிவித்த நிலையில், 2010 ஆகஸ்ட் 10ஆம் தேதி அதன் பெருந்தொற்று காலம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு H1N1, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பரவும் ஒரு பாதிப்பாக மாறியது.

    Advertisement

    அறிகுறிகள்

    H1N1 பெரும்பாலும் இருமல், தும்மல் மற்றும் பேசும்போது வெளியேறும் சுவாச துளிகள் மூலம் பரவுகிறது. குறிப்பாக வீட்டுக்குள், காற்றோட்டம் குறைந்த இடங்களில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். மேலும் நாம் பயன்படுத்தும் பொருட்களின் மேற்பரப்பில் வைரஸ் சில காலம் உயிருடன் இருக்கலாம். எனவே இருமல் மற்றும் தும்மலின்போது வாயை மூடுவது, கைகளை அடிக்கடி கழுவுவது ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.

    காய்ச்சல், நடுக்கம், வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல் மற்றும் தசை வலி, சோர்வு, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைப்பு போன்ற அறிகுறிகளாகும். சிலருக்கு வாந்தி, குமட்டல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பு லேசாக இருக்கும் என்றாலும், வயதானவர்கள், கர்ப்பிணிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.

    Advertisement

    நீல உதடுகள்

    சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சுவலி, தொடர்ந்து அதிக காய்ச்சல், உதடுகள் நீல நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். H1N1 சிகிச்சையில் ஒசெல்டமிவிர் (Oseltamivir) முக்கியமான மருந்தாக உள்ளது. அறிகுறிகள் தொடங்கிய முதல் 48 மணி நேரத்துக்குள் சிகிச்சை தொடங்கும்போது அதன் பலன் அதிகமாக இருக்கும். 2009க்குப் பிறகு இந்தியாவில் H1N1 பாதிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகி வருகின்றன.

    English Summary

    Delhi has reported a sudden rise in H1N1 swine flu cases, with 1,777 cases recorded so far this year(இந்தியாவில் திடீரென அதிகரிக்கும் பன்றி காய்ச்சல்): H1N1 Swine Flu Cases in India.