இந்த 2 விஷயம் நடக்குற வரைக்கும்.. சும்மா விட மாட்டோம்.. மத்திய அரசுக்கு மாணவர்கள் வைத்த தரமான செக்

  • டெல்லி: டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' மற்றும் மாணவர் அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் தீவிரப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற முதற்கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இதற்கு முன் சந்திப்புகளைப் போல் அல்லாமல், இம்முறை போராட்டக்காரர்களின் நிபந்தனைக்கு இணங்க பொதுவான இடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    பொதுவான இடத்தில் உயர்மட்டக் குழு சந்திப்பு

    பாஜக முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய சுகாதார அமைச்சருமான ஜே.பி. நட்டா மற்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அரசுத் தரப்பு, CJP பிரதிநிதிகளைச் சந்திக்கிறது. இன்று மக்களவை ஒத்திவைக்கப்பட்டவுடன் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.

    முன்னதாக, மத்திய அமைச்சர்கள் தங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் மற்றும் அரசு அலுவலகங்களைத் தவிர்த்து பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். அவர்களின் இந்த கோரிக்கையை ஏற்றே தற்போது நடுநிலையான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    பேச்சுவார்த்தையில் நீடிக்கும் 2 கோரிக்கைகள்

    அரசுத் தரப்பில் தொடர்ந்து சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டுவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் முட்டுக்கட்டையாக உள்ளன:

    தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரிக்கை

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் CJP கட்சியினர்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட கல்வித் துறை சார்ந்த சிக்கல்களுக்குப் பொறுப்பேற்று அவர் விலக வேண்டும் என்பதே அவர்களின் முதன்மை நிபந்தனையாகும்.

    Advertisement

    இருப்பினும், அமைச்சரின் ராஜினாமா கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து வருவதால், பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்குச் செல்லாமல் முடங்கியுள்ளது.

    நிபந்தனைகளை மாற்றும் போராட்டக்காரர்கள்

    தற்போது விவாதத்திற்கு முன்னதாகவே அமைச்சரின் ராஜினாமாவை ஒரு முன் நிபந்தனையாக போராட்டக்காரர்களும் எதிர்க்கட்சிகளும் முன்னிறுத்துவதாக மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது. அதாவது போராட்டக்காரர்கள் தங்களின் நிபந்தனைகளைத் தொடர்ந்து மாற்றி வருகிறார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டும்தான் தற்போது பேச்சுவார்த்தை வெற்றிபெறாமல் இருக்க காரணம் ஆகும்.

    அடுத்தகட்ட நகர்வு என்ன?

    செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனம் வாங்சுக்கை, ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். அந்தச் சந்திப்பு பாசிட்டிவ்வாக அமைந்ததாகத் தெரிவித்த மத்திய அரசு, இன்று நடைபெறும் கூட்டத்தின் மூலம் இரு தரப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்பட்டு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

    Advertisement

    இருப்பினும், கல்வி அமைச்சரின் ராஜினாமா என்ற உறுதியான கோரிக்கையில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து நின்று வருவதால், டெல்லி வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    English Summary

    Delhi Student Protest: Centre-CJP Talks Reach Deadlock for these 2 major reasons