ஆசிரியர் தினத்தை கையில் எடுத்த கரப்பான் பூச்சி கட்சி.. தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்! என்ன நடந்தது

  • டெல்லி: தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 5ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்த பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. செப்டம்பர் 12- 13 தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த பேரணியால் அசம்பாவிதம் ஏற்படும் என கருதுவதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று கூறி தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு, தடை விதிக்க மறுத்துவிட்டது. .

    Advertisement

    நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் தொடர்ந்து வினாத்தாள் லீக் ஏற்படுவதாகக் கூறி, கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூன் மாதம் தொடங்கிய இந்த போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் இணைந்து கொண்டார். அவரது உண்ணாவிரதம் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சி

    அப்போது ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது, டெல்லி போலீஸ் மற்றும் அதிவிரைவு படையினர் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், அதையும் தாண்டி போராட்டங்கள் தொடர்ந்தன. நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.

    அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுடன், போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகள், FIRகளை திரும்பப் பெற வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக இருந்தது. ஆனால், மத்திய அரசு அளித்த உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று கரப்பான் பூச்சி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    Advertisement

    நீதிமன்றத்தில் வழக்கு

    இந்த சூழலில் தான் செப்டம்பர் 5ஆம் தேதி மீண்டும் டெல்லியில் பேரணி நடத்த போவதாக கரப்பான் பூச்சி கட்சி அறிவித்தது. இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை தடுக்க கோரி ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ராஜேந்திர சிங் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரிக்ஸ் மாநாடு செப்டம்பர் 12- 13 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், சர்வதேச தலைவர்கள் டெல்லிக்கு வரவுள்ளனர். இதனால் பிரிக்ஸ் மாநாடு முடியும் வரை பேரணியை ஒத்திவைத்து செப்டம்பர் 15ஆம் தேதி நடத்தலாம் என மனுதாரர் தரப்பு வாதிட்டது.

    Advertisement

    மேலும், "தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டின் போது இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தலாமா? அவர்கள் ஏற்கெனவே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்" என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ரிஸ்வான் அகமது வாதிட்டார். மேலும், மாநாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பேரணியை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரினார்.

    ஏற்க மறுப்பு

    இருப்பினும் இந்த வாதத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், அசம்பாவிதம் ஏற்படும் என்று முன்கூட்டியே கருதுவதற்கு எந்த சூழ்நிலையும் இல்லை என்றார். பேரணியில் பங்கேற்பவர்கள் அமைதியாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசாரின் பொறுப்பு என்றும் தெரிவித்தார். அவர் மேலும், "அனைவரும் சட்டத்தையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். ஒருவரது உரிமையை மற்றொருவர் மதிக்க வேண்டும்" என்றார்.

    Advertisement

    மேலும், பேரணியை நடத்தும் கரப்பான் பூச்சி கட்சி ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக இல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக இருப்பதால்.. அதற்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்புவதிலும் சிக்கல் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், கரப்பான் பூச்சி கட்சியின் பேரணிக்கும் தடை விதிக்க மறுத்துவிட்டது.

    ஆசிரியர் தினம்

    உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், பேரணியை ஒருங்கிணைக்கும் பணிகளில் கரப்பான் பூச்சி கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதில் விஷயம் என்னவென்றால் செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினத்தை கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்திற்கு தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே நாடு முழுக்க உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பதை கரப்பான் பூச்சி கட்சி வலியுறுத்தும் நிலையில், ஆசிரியர் தினத்தன்றே இந்த பேரணியையும் நடத்தி மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கிறது.

    English Summary

    Supreme Court has refused to stay the September 5 rally announced by the Cockroach Janta Party(கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்): Cockroach Janta Party latest news in tamil.