இப்போதைக்கு தொகுதி மறுவரையறை மசோதா வராது.. திமுக எம்பி திருச்சி சிவா விளக்கம்!

  • டெல்லி: கடந்த முறை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து தோற்கடித்தன. இந்நிலையில் நடப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா கூறியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது, "நாங்கள் எஃப்சிஆர்ஏ-வை எதிர்க்கிறோம். ஏனெனில் அந்த சட்டத்தில் சிறுபான்மை கிறிஸ்தவ சமூக மக்களுக்கு எதிராக பல விதிகள் இடம் பெற்றிருக்கின்றன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசப்பட்டிருக்கிறது.

    Advertisement

    திமுக இந்த மசோதாவை எதிர்ப்பதுடன், இதனை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தும். அதேபோல தொகுதி மறுவரையறை குறித்தும் விளக்க வேண்டியுள்ளது.

    தவெக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. ஏனெனில் இந்த விஷயத்தில் ஏற்கெனவே உரிய நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டிருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களை கூட்டி எதிர்ப்பை தெரிவித்தார்.

    தொகுதி மறுவரையறையால் தென்னிந்திய மாநிலங்கள்தான் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் இருந்தது என்பதால், ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களையும் நாங்கள் கூட்டியிருந்தோம்.

    Advertisement

    நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு கையில் எடுக்கிறது எனில், அதை உறுதியாக எதிர்ப்போம் என்று அப்போதே தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.

    நாடாளுமன்றத்திலும் அந்த மசோதா வந்தபோது, அதற்கு எதிராக வாக்களித்து அதை தோல்வியடைய செய்தோம். பாஜக எதிர்கொண்ட முதல் தோல்வி அதுதான் என்று நான் நினைக்கிறேன். தற்போதைய நிலையில், வரவிருக்கும் கூட்டத்தொடரில் அரசு இந்த மசோதாவை மீண்டும் கொண்டுவர நிகழ்ச்சி நிரலில் சேர்க்கவில்லை. அதை கொண்டுவருவதற்கான வாய்ப்பும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Delimitation: The opposition parties including the DMK jointly defeated the Constituency Redelineation Bill tabled by the Central Government in the Parliament last time. In this case, DMK MP Trichy Siva has said that there is no chance to table this bill again in the current session.