ராஜினாமா செய்யும் மத்திய கல்வி அமைச்சர்? அர்ஜெண்டாக அமித்ஷாவை சந்திக்கிறார் தர்மேந்திர பிரதான்!

  • டெல்லி: நீட், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான் பூச்சி கட்சி அமைப்பினர், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தர்மேந்திர பிரதான் அவசரமாக சந்திக்கிறார்.

    Advertisement

    இந்த சந்திப்பை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் வருகின்றனர். இதனால் இளைஞர்களும், மாணவர்களும் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.

    Advertisement

    மாணவர்களின் டிமாண்ட்

    போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள், நீட் குளறுபடிக்கு பொறுப்பு ஏற்று தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், நீட் குளறுபடியால் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி வேண்டும், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடங்கியிருந்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை தொடங்கினார். 21 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை அடுத்து, அவர் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    Advertisement

    மூடப்பட்ட கதவுகள்

    மறுபுறம் இன்று திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகை நடைபெறும் என்றும் மாணவர்கள் கூறியிருந்தனர். அவர்கள் சொன்னது போலவே, நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கில் மாணவர்களும் இளஞர்களும் திரண்டனர். காவல்துறையினர் எத்தனையோ இடங்களில் தடுப்புகளை வைத்தும் அதை தாண்டி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறியிருக்கின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் வாசல்கள், குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவு வாயிலும் மூடப்பட்டிருக்கிறது.

    முடங்கிய நாடாளுமன்றம்

    இளைஞர்களுக்கு ஆதரவாக நாடளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, வந்தே மாதரம் பாடல் பாதுகாப்பு மசோதா, தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்குள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, மதியம் 2 மணி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

    Advertisement

    நாடாளுமன்றத்திலிருந்து சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் தலைமையில் எம்பிக்கள் ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி நடத்த முயன்றனர். இதையடுத்து அந்த எம்பிக்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

    English Summary

    Dharmendra Pradhan: Members of the 'Cockroach Party' have laid siege to Parliament, demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan over the NEET and CBSE exam results. Amidst this situation, Dharmendra Pradhan is holding an urgent meeting with Union Home Minister Amit Shah.