தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடக்கம் மட்டுமே! டிஸ்சார்ஜ் ஆன உடனே சோனம் வாங்சுக் சொன்ன வார்த்தை

  • டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பது தொடக்கம் மட்டுமே என்றும் கல்வி அமைப்பில் உள்ள பிரச்சனைகள் சீர்திருத்தப்பட்டால் இந்தியா இன்னும் சிறந்த நாடாக மாறும் என்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். மேலும், அமைதியான போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

    Advertisement

    நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் முக்கியமானதாக இருந்தது. டெல்லி போலீசார் அவரை ஜந்தர் மந்தரில் இருந்து அப்புறப்படுத்திய பிறகும் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.

    Advertisement

    சோனம் வாங்சுக்

    இது நாடு முழுக்க போராட்டத்தின் மீது கவனத்தை ஈர்த்தது. போராட்டங்கள் டெல்லியை தாண்டி பல ஊர்களுக்கு பரவிய நிலையில், அதன் பிறகே தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் ஆன சோனம் வாங்சுக், தனது மனைவி கீதாஞ்சலி ஆங்மோவுடன் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய வாங்சுக், இந்த ராஜினாமா வெறும் தொடக்கம் மட்டுமே என்றார்.

    தொடக்கம் தான்

    அவர் மேலும் பேசுகையில், "தர்மேந்திர பிரதானின் ராஜினாமா என்பது முடிவு அல்ல.. அது ஒரு தொடக்கம் மட்டுமே. கல்வி தொடர்பான பிரச்சனைகள் இப்போது தான் கவனிக்கப்படுகிறது. கல்வி பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கொண்டு வரப்பட்டால் இந்தியா இன்னும் சிறந்த நாடாக மாறும். அந்த மாற்றத்திற்கான பயணம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக நான் நம்புகிறேன். தற்போது அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பாசிட்டிவ் உரையாடலின் மூலமாகவே சிறந்த முடிவுகள் எடுக்கப்படும். அப்போது தான் உலக தரத்தில் ஒரு சிறந்த கல்வி அமைப்பை உருவாக்க முடியும்.

    Advertisement

    நடவடிக்கை கூடாது

    அமைதியான போராட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது.. அமைதியாக போராடுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. கெடுதல் செய்ய வேண்டும் என நினைத்தவர்களுக்கு மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அமைதியான முறையில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை. அந்த உரிமை முழுமையாக மதிக்கப்பட வேண்டும்.

    அகிம்சை

    இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றி வன்முறையால் கிடைத்தது அல்ல. தடியாலும், கற்களாலும் கிடைத்தது அல்ல. அமைதியாக நாம் போராடினோம் அதில் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த 6 ஆண்டுகளாக லடாக்கில் காந்திய வழியை பின்பற்றி வருகிறோம். அது தேசிய அளவிலும் பலன் தருமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இந்த போராட்டம், காந்தியின் அகிம்சை பாதை இன்னும் நூற்றாண்டுகள் கடந்தும் பொருத்தமானதாகவே இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது.

    Advertisement

    நான் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு விஷயத்தை கோரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன். காந்தி காட்டிய அமைதியான, ஜனநாயக வழியில் தான் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். வன்முறைக்கு இடமில்லை. அமைதியாக போராடும்போது தீர்வு கிடைக்க சற்று காலம் ஆகலாம். ஆனால் அமைதியான போராட்டம் மட்டுமே இறுதியில் வெற்றியை தரும். எங்கள் போராட்டமும் அதையே தான் காட்டுகிறது" என்றார்.

    English Summary

    Social activist Sonam Wangchuk said Dharmendra Pradhan's resignation is only the beginning(இந்திய கல்வி முறை குறித்து சோனம் வாங்சுக்): Sonam Wangchuk about Indian education system.