என் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. ஆதங்கப்பட்ட மோடி! எதிராக வேலை செய்யும் அந்த மறைமுக சக்தி?

  • டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தொடர் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது இந்திய அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த இந்த ஆக்ரோஷமான போராட்டம், மத்திய அரசைப் பணிய வைத்து, ஒரு மத்திய அமைச்சரின் விக்கெட்டையே வீழ்த்தியிருக்கிறது.

    Advertisement

    ஆனால், டெல்லி அரசியல் வட்டாரங்களில் இப்போது பேசப்படும் மிக முக்கியமான விஷயம் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மட்டுமல்ல.. அதற்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான்!

    Advertisement

    12 ஆண்டு காலத்தில் இல்லாத மன உளைச்சல்

    கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, எத்தனையோ பெரிய எதிர்ப்புகளையும், விவசாயிகளின் போராட்டங்களையும், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தனது அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சரை, தெருவில் நடக்கும் போராட்டத்திற்காக உடனடியாகப் பணிந்து தூக்கியெறிந்த வரலாறு அவருக்குக் கிடையாது.

    எப்பொழுதும் 'கெத்து' காட்டும் பிம்பத்தையும், எதிர்ப்புகளுக்கு பணியாத 'ஸ்ட்ராங் மேன்' பிம்பத்தையுமே மோடி தனது அரசியல் பலமாக வைத்திருந்தார். ஆனால், இந்த முறை தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்த முடிவு, பிரதமரை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளதாக டெல்லி உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    இதுவரை என்னுடைய 12 ஆண்டு கால ஆட்சியில் இப்படி ஒரு சூழல் வந்ததே இல்லையே என்று பிரதமர் தனது நெருங்கிய வட்டாரத்தில் ஆதங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    மோடிக்கு எதிராகச் செயல்படுகிறதா அந்த மறைமுக சக்தி?

    பிரதமர் மோடியை மிகவும் கவலையடையச் செய்திருப்பது மாணவர்களின் எதிர்ப்பு மட்டுமல்ல.. இந்த போராட்டத்தின் பின்னணியில் ஏதோ ஒரு வலிமையான சக்தி இயங்குகிறதோ என்ற சந்தேகம்தான்.

    12 ஆண்டுகளாக எவ்வளவோ பெரிய சர்ச்சைகள் வந்தபோதும் அசையாத பாஜக அரசு, இந்த முறை சி.ஜே.பி என்ற புதிய அமைப்பின் போராட்டத்திற்கு முன்பாக மிக விரைவாகப் பணிந்தது எப்படி? எதிர்க்கட்சிகளின் சாதாரண அரசியல் அழுத்தத்தையும் தாண்டி, மோடி அரசுக்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏதோ ஒரு பெரிய நெட்வொர்க் காய் நகர்த்துகிறதோ என்ற அச்சம் பாஜக மேலிடத்திற்கு எழுந்துள்ளது.

    Advertisement

    மோடியின் அதிகார பிம்பத்தைச் சரிப்பதே இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நோக்கம்.. மோடி வீழ வேண்டும் என்பதை யாரோ சிலர் முடிவே செய்துவிட்டார்கள் என்று பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலரே ரகசியமாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

    ஜந்தர் மந்தர் முதல் பிரதமர் இல்லம் வரை!

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தொடக்கத்திலிருந்தே கல்வி அமைச்சகத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்ற விமர்சனம் இருந்தது. இருப்பினும், தர்மேந்திர பிரதானைப் பாதுகாப்பதே பாஜகவின் தலைமைத் திட்டமாக இருந்தது. ஆனால், டெல்லியின் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் திரண்ட விதமும், அதற்கு தேசிய அளவில் கிடைத்த ஆதரவும் பிரதமரின் கவனத்தை ஈர்த்தது.

    Advertisement

    நிலைமை கைமீறிப்போனால் அது அரசின் பிம்பத்தையே முற்றிலுமாகச் சிதைத்துவிடும் என்பதை உணர்ந்தே, வேறு வழியின்றி தர்மேந்திர பிரதானை விலக வைக்கும் கடினமான முடிவை மோடி எடுத்தார். இந்த முடிவு மோடியின் விருப்பத்திற்கு முற்றிலும் மாறானது என்பதால், அவர் மிகுந்த வருத்தத்திலும் கோபத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    மோடிக்கு இது எச்சரிக்கை மணியா?

    இந்தச் சம்பவம் இந்திய அரசியலில் ஒரு புதிய திருப்பத்தைக் குறிக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மக்கள் போராட்டத்திற்கு மோடி அரசு நேரடியாகப் பணிந்து தன் அமைச்சரைப் பதவி விலக வைத்திருக்கிறது.

    இது வெறும் கல்வி அமைச்சரின் ராஜினாமா மட்டுமல்ல... மோடியின் அசைக்க முடியாத அதிகாரத்திற்கு விழுந்த முதல் பெரிய அடி! இது இந்த ராஜினாமாவோடு நிற்காது.. இனியும் தொடரும்.. இனிவரும் நாட்களில், மோடிக்கு எதிராக அணிதிரளும் இந்த அரசியல் சூறாவளியை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதே தற்போதைய கேள்வி.

    English Summary

    Dharmendra Pradhan Resigns: Narendra Modi is smelling something fishy in govt