டெல்லி IIT மாணவருக்கு நேர்ந்த சோகம்! மத்திய அரசுக்கு காக்ரோச் கட்சி வார்னிங்! வெடிக்கும் போராட்டம்?

  • டெல்லி: டெல்லி ஐஐடியில் பயின்று வந்த ரிஷிகேஷ் குமார் எனும் மாணவர், ஆக.22ம் தேதி பல்கலைக்கழக கட்டிடத்தின் மாடியிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்நிலையில் மத்திய அரசுக்கு காக்ரோச் ஜனதா கட்சி (CJP) முக்கிய எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.

    ரிஷிகேஷ் குமார் உயிரிழந்த சம்பவத்தில் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த மரணம் தொடர்பாக விசாரிக்க டெல்லி ஐஐடி விசாரணை குழுவை அமைத்திருக்கிறது.

    இந்நிலையில், இந்த மரணம் தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அவர் கூறியிருப்பதாவது, "நமது நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடி-களில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 65 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டிள்ளனர். சிறந்த கல்வி நிறுவனங்களிலேயே இந்த நிலைமை எனில்.. மற்ற இடங்களில் நிலைமையை யோசித்து பாருங்கள்.

    நமது கல்வி முறையில் முழுமையான மாற்றம் தேவை. மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி மௌனமாக போராடுவதைவிட, அவர்களை ஆதரிக்க அனைவரும் இருக்கிறார்கள் என்கிற உணர்வையும், அவர்களின் குரல் கேட்கப்படுகிறது என்பதையும், எதிர்காலத்தை பற்றி நம்பிக்கை கொண்ட சூழலை நாம் உருவாக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

    உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை என்பது தொடர்ந்து நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக சொல்லப்படும் தமிழ்நாட்டில் கூட சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை நடந்திருக்கிறது. இது குறித்து பெற்றோர்களும், மாணவர் அமைப்புகளும், கல்வியாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையே என்று சொல்லப்படுகிறது.

    இதற்கிடையில் டெல்லி ஐஐடி மாணவர் மரணம் புதிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை குழுவுக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி முக்தா குப்தா தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். குழுவில் எய்ம்ஸ் மனநலத்துறை தலைவர் பேராசிரியர் பிரதாப் சரண், 4 மாணவர் பிரதிநிதிகள் மற்றும் ஐஐடி டெல்லி பதிவாளர் ஆகியோர் உறுப்பினராக இருக்கின்றனர்.

    இந்த குழு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் பேசி, தற்போது இருக்கும் நடைமுறைகளை ஆய்வு செய்யும். மேலும் மாணவர் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும். 2 வாரங்களுக்குள் இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

    இந்த விவகாரம் குறித்து காக்ரோச் ஜனதா கட்சி, பேசியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. விரைவில் கல்வி நிலைமை குறித்து இந்த அமைப்பின் சார்பில் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    English Summary

    education system: Rishikesh Kumar, a student at IIT Delhi, took his own life on August 22 by jumping from the terrace of a university building. Against this backdrop, the Cockroach Janata Party (CJP) has issued a significant warning to the Central Government.