ஸ்டாலின் போட்ட உத்தரவு.. சோனம் வாங்சுங்கை சந்தித்து ஆதரவளித்த ஆ ராசா.. நாடாளுமன்றம் போகும் விவகாரம்

  • டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நலம் மோசமான நிலையில் இன்று 20வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில் திமுக எம்பி ஆ ராசா அவரை நேரில் சந்தித்து ஆதரவு வழங்க உள்ளதோடு, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நீட் உள்பட பல்வேறு தேர்வுகளில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்ட வருகிறது. இந்த முறை வினாக்கள் கசிந்ததால் இளநிலை மருத்துவ படிப்புக்காக மாணவர்கள் எழுதிய முதல் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 2வது முறையாக நீட் தேர்வு நடத்தி ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இதனால் நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் தனது 20வது நாள் உண்ணா விரத போராட்டத்தை கடைப்பிடித்து வருகிறார். இதனால் அவரது உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சோனம் வாங்சுக்கை சந்தித்து ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று திமுக ஆதரவு வழங்கி உள்ளது. திமுக சார்பில் எம்பி ஆ ராசா இன்று ஜந்தர் மந்தர் பகுதிக்கு சென்று சோனம் வாங்சுக்கை சந்தித்து ஆதரவு வழங்கி நலம் விசாரித்தார்.

    Advertisement

    அதன்பிறகு ஆ ராசா பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். திமுக கட்சியில் இருந்து வருகிறேன். கட்சியின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்கே ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து சோனம் ஜியை சந்தித்து அவரது உண்ணாவிரதத்தின் நோக்கத்திற்கு அறம் சார்ந்து அரசியல் ரீதியாக ஆதரவு அளிக்க வந்தோம்.

    நாட்டிலேயே முதல் முறையாக ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளோம். திமுக மற்றும் முக ஸ்டாலினின் முழு சப்போர்ட் உங்களுக்கு இருக்கும். மோடி அரசு தேசத்துக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது. எம்கே ஸ்டாலின் முழு ஆதரவு வழங்குவது மட்டமின்றி இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப ஆதரவு வழங்கி உள்ளாம்'' என்றார்.

    English Summary

    Social activist Sonam Wangchuk is currently on a hunger strike in Delhi, demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan over irregularities in the NEET examination. As he enters the 20th day of his fast amidst deteriorating health, DMK MP A. Raja has announced plans to meet him in person to extend support and to raise the issue in Parliament.