ஒரு நபருக்கு 20 முதல் 30 கிராம் தான் லிமிட்.. எண்ணெய் பயன்பாடு.. மத்திய அரசு கொடுத்த வழிகாட்டுதல்!

  • டெல்லி: ஒரு நபர் நாளொன்றுக்கு 20 முதல் 30 கிராம் வரை மட்டுமே எண்ணெய் உட்கொள்ள வேண்டும் என்று மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. பொரிப்பதற்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளதோடு, அதிகளவில் எண்ணெய் பயன்படுத்துவது உடல் எடை அதிகரிப்பு, இதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கான அபாயத்தை உண்டாக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Advertisement

    மத்திய உணவு பாதுகாப்புத் துறை சார்பாக சமையல் எண்ணெய் பயன்பாடு குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய் பரவல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் ஒரு நபர் நாளொன்று 20 முதல் 30 கிராம் வரை மட்டுமே எண்ணெய்யை உட்கொள்ள வேண்டும்.

    Advertisement

    அதேபோல் அதிக அளவிலான எண்ணெய்யை பயன்படுத்துவது உடல் எடை அதிகரிப்பு, அதிகப்படியான கலோரி சேர்க்கை மற்றும் இதய நோய் அபாயத்தை உண்டாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொரிப்பதற்கு பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, எண்ணெயை மீண்டும் சூடாக்கும் போது அதில் ஆபத்தான டிரான்ஸ் கொழுப்புகளும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களும் உருவாகின்றன. சமையல் எண்ணெயில் நாம் செய்யும் இதுபோன்ற சிறிய மாற்றங்கள், கலோரிகளை கட்டுப்படுத்த உடல் பருமன் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை உறுதி செய்யும்.

    Advertisement

    அதேபோல் சமைக்கும் முறையின் வெப்ப நிலைக்கு ஏற்ப எண்ணெய்யை தேர்ந்தெடுப்பது அதன் ஊட்டச்சத்தை தக்க வைக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வீடுகளில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை 3 முறைக்கு மேல் மீண்டும் சூடேற்றி பயன்படுத்துவதே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Domestic Oil: Daily Domestic Oil Intake Should Not Exceed 30g, FSSAI Warns Against Reusing Fried Oil