டெல்லி: ''நமக்கு ஒரு நதியும், பெருங்கடலும் தேவையாக இருக்கிறது. அட்லான்டிக் பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல் பெயரை 'டிரம்ப் பெருங்கடல்' அல்லது 'அமெரிக்க பெருங்கடல்' என மறுபெயரிட விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருப்பது கவனம் பெற்றுள்ளது.
நடிகர் 'சிவா' நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் 'தமிழ் படம்'. இந்த படத்தில் 'ஒரு சூறாவளி கிளம்பிதே' என்ற பாடல் வரும்.
அந்த பாடலில் வரும் காட்சிகளில் நடிகர் சிவாவின் பெயரில் 'சிவா விமான ஏர்போர்ட், சிவா ஐடி பார்க், சிவா ரயில் நிலையம், சிவா பீச், சிவா பிணக்கிடங்கு, சிவா குடிநீர் வாரியம், சிவா சிறைச்சாலை, சிவா மின்சார வாரியம்'' என்று அனைத்திற்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது போன்ற காட்சி வரும். இதனை அப்படியே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது கையில் எடுத்துள்ளனர். அடுத்த நாடுகளின் பெயரில் இருக்கும் வளைகுடா, ஏரிகளை அமெரிக்காவின் பெயரில் மாற்றிய டொனால்ட் டிரம்ப் தற்போது பெருங்கடலின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளார் அதுவும் அட்லான்டிக் பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடலின் பெயரை மாற்றுவது தான் நோக்கம் என்று அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளார். அமெரிக்காவில் அடுத்த மாதம் தொடக்கத்தில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில் அவரது ஆட்சிக்கு கிடைக்கும் மதிப்பெண்ணாக இது பார்க்கப்படுகிறது. இதனால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அந்த வகையில் நேற்று அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் கிளார்க்ஸ்வில்லில் நடந்த பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது: ''நமக்கு ஒரு நதி தேவையாக உள்ளது. அதேபோல் பெருங்கடல் ஒன்றும் தேவையாக இருக்கிறது. இதனால் 2 பெருங்கடல்களல் ஏதேனும் ஒன்றுக்கு புதிய பெயர் சூட்டலாம். நாம் அதை 'டிரம்ப் பெருங்கடல்' அல்லது அமெரிக்க பெருங்கடல்' என்று அழைக்கலாம். நான் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து செல்வதற்கு முன்பாக ஒரு பெருங்கடல் மற்றும் ஒரு முக்கிய நதியின் பெயரை மாற்றம் செய்ய விரும்புகிறேன். '' என்றார். இதனை கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் சிரித்ததோடு, கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். டொனால்ட் டிரம்ப் தற்போது தனது நாட்டை சுற்றியிருக்கும் பல்வேறு முக்கிய இடங்களின் பெயரை மாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார். அதன் ஒருபகுதியாக தான் அட்லான்டிக் பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல்களின் பெயரை டிரம்ப் பெருங்கடல் அல்லது அமெரிக்க பெருங்கடல் என்று பெயர் மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னதாக 'மெக்சிகோ வளைகுடா'வின் பெயரை 'அமெரிக்க வளைகுடா' என்று பெயர் மாற்றினார். இது மெக்சிகோ - அமெரிக்கா இடையே மோதலையும், பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு அமெரிக்கா - கனடா இருக்கும் ஒன்டாரியோ ஏரியை, 'அமெரிக்கா ஏரி' என்று ஆகஸ்ட் மாதத்தில் பெயர் மாற்றம் செய்தார். இது அமெரிக்கா - கனடா இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.ஹைதராபாத் சாலைக்கு டொனால்ட் டிரம்பின் பெயர்.. என்ன காரணம்? காங்கிரஸ் அரசின் திட்டம் இதுதான்