டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் நாங்கள் இப்படியே திரும்பி போகமாட்டோம் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன தலைவர் அபிஜித் திப்கே மத்திய அரசுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே கூறியுள்ளார். இதுபற்றி அபிஜித் திப்கே கூறுகையில், ''தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். நீங்கள் பயப்படாமல் இந்த அரசுக்கு பணியாமல் இருந்தால் யாரை வேண்டுமானாலும் ராஜினாமா செய்ய வைக்கலாம். இதற்கு இந்த சம்பவமே சாட்சி. இது ஜனநாயக நாடு. இங்கு யாரும் பயப்பட வேண்டாம். அவர் (தர்மேந்திர பிரதான்) ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் நம்முடைய இன்னும் 2 கோரிக்கைகள் உள்ளன. இதனால் நாங்கள் இப்படியே போகமாட்டோம். ஏனென்றால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை கண்டிப்பாக கிடைக்க வேண்டும். அதேபோல் 20ம் தேதி காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கரப்பான்பூச்சிகளுடன் விளையாடாதீர்கள். அதோடு இதுதான் முதல் விக்கெட். நாங்கள் இத்துடன் நிறுத்தமாட்டோம். இது தொடக்கம் மட்டும் தான். கடந்த 36 நாட்களாக இங்கு அமர்ந்து போராடிய அனைத்து மாணவர்களுக்கும் நான் சல்யூட் செய்கிறேன். அதோடு நான் மிக முக்கியமான விஷயத்தை கூற விரும்புகிறேன். இன்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததற்காக என்னை ஹீரோவாக்காதீர்ள். இந்த தவறை செய்யாதீர்கள். ஏனென்றால் ஒருவரை கதாநாயகனாக்கியதால் தான் இந்த நாடு பாழாகிவிட்டது'' என்று மத்திய அரசுக்கு கடும் வார்னிங்கை கொடுத்துள்ளார். மேலும் தர்மேந்திர பிரதான் ராஜினாமா என்பது இது இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி '' என்று அபிஜித் திப்கே கூறினார்.