E20 பெட்ரோலால் 6 சதவீதம் வரை மைலேஜ் அடிவாங்கும் – நாடாளுமன்றத்தில் நிதின் கட்காரி ஒப்புதல்

  • டெல்லி: ''பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலப்பது என்பது வாகனங்களுக்கு 2 முதல் 6 சதவீதம் வரை மட்டுமே மைலேஜ்ஜை குறைக்கும். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இன்ஜின் செயல்திறன் நன்றாக உள்ளதோடு, வாகனங்களில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை'' என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

    Advertisement

    ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் போர் நடவடிக்கையால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் அரபு நாடுகளிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய கசசா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியாக பெட்ரோலில் 20 சதவிதம் வரை எத்தனால் கலப்பு அறிமுகம் செய்யப்பட்டது.

    Advertisement

    நம் நாட்டில் பெட்ரோலில் 10 சதவீதம் வரை எத்தனால் கலப்பு நடைமுறையில் உள்ள நிலையில் அதனை 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. ஆனால் 20 சதவீதம் வரை பெட்ரோலில் எத்தனால் கலக்கும்போது வாகனத்தின் செயல்திறன் குறைகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக விவாதம் நடந்து வருகிறது.

    இருப்பினும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். 20 சதவீதம் வரை பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்தும்போது எந்தவித பாதிப்பும் வராது என்று உறுதியாக கூறி வருகிறார். இந்நிலையில் தான் லோக்சபாவில் சந்திரசேகர் எம்பி பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் என்னென்ன பயன்கள்? என்னென்ன பிரச்சனைகள் வருகிறது? என்பது பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

    Advertisement

    இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார். அதில், ''பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலப்பது என்பது மைலேஜை 2 முதல் 6 சதவீதம் வரை குறைக்கம். இது வாகனங்களின் வகை மற்றும் தயாரிப்பு ஆண்டை பொறுத்து மாறுபடும்.

    டைனமோமீட்டரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இன்ஜினின் டூரோபிளிட்டி நன்றாக உள்ளது. அதேபோல் சாலைகளில் வாகன சோதனைகளில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பால் எந்த கோளாறும் ஏற்படவில்லை..

    பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கொண்டு பிஎஸ்-III, பிஎஸ்-IV மற்றும் பிஎஸ்-VI உள்ளிட்ட வாகனங்கள், டூவீலர்களில் பயன்படுத்தும்போது என்ன நடக்கிறது? என்பது பற்றி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) மற்றும் இந்திய ஆட்டோமோட்டீவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகிய அமைப்புகளால் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    Advertisement

    அப்போது E10 எரிபொருளுடன் ஒப்பிடுகையில், E20 எரிபொருளில் acceleration சிறப்பாக உள்ளது. சுமார் 30 சதவீதம் வரை குறைவாக கார்பன் உமிழ்வு வருவதாக இந்த ஆய்வவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுடன் அதிக அளவிலான எத்தனால் கலப்பதன் மூலம் combustion கிடைக்கிறது'' என்றார். இருப்பினும் இந்த ஆய்வு பற்றி பொதுவெளியில் தகவல்களை பகிர்ந்து கொள்ளாததுஏன்? வாகனங்களில் மாற்ற வேண்டிய பாகங்கள் எப்படி E20 எரிபொருளால் பாதிக்கப்படுகிறது என்பது பற்றி அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    முன்னதாக E20 பயன்படுத்தும்போது 2005ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அறிமுகம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் 2016-க்கு முன் தயாரிக்கப்பட்ட BS-III வாகனங்களில் உள்ள சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை (gaskets) பாதிப்பு வருகிறது. இதனை வழக்கமான பராமரிப்பு பணியின்போது எளிதாக மாற்ற முடியும்'' என்று கூறியிருந்த நிலையில் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படாது. 6 சதவீதம் வரை எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

    English Summary

    E20 Petrol: "Blending up to 20 percent ethanol in petrol will reduce fuel costs by 2 to 6 percent. Tests conducted in this regard have shown that engine performance remains good and no issues arise in the vehicles," Union Minister for Road Transport Nitin Gadkari stated in Parliament.