வெடிக்கும் E20 சர்ச்சை.. தாறுமாறாக குறையும் மைலேஜ்? மத்திய அரசு கொடுத்த திடீர் விளக்கம்! காரணம் என்ன

  • டெல்லி: E20 பெட்ரோல் வந்த பிறகு வாகனங்களில் மைலேஜ் குறைவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இதற்கிடையே வாகனங்களின் மைலேஜ் குறைவதற்கு E20 பெட்ரோல் மட்டுமே காரணம் அல்ல என்றும், ஓட்டுநரின் வாகனம் ஓட்டும் முறை, போக்குவரத்து நெரிசல், வாகன பராமரிப்பு, டயர் பிரஷர் என அனைத்துமே மைலேஜ்ஜை பாதிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Advertisement

    இந்தியாவில் இப்போது மத்திய அரசு E20 பெட்ரோலை ஊக்குவித்து வருகிறது. அதாவது 80% பெட்ரோலும் 20% எத்தனாலும் கலக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பது தொடங்கி சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவது வரை பல நன்மைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் பொதுமக்கள் E20 பெட்ரோல் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.

    Advertisement

    மத்திய அரசு

    மைலேஜ் குறைவு தொடங்கி வாகனங்களின் பாகங்களில் சிக்கல் ஏற்படுவது வரை பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இருப்பினும், மத்திய அரசு E20 பெட்ரோலை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. மேலும், இது தொடர்பாக எழும் புகார்களுக்கும் விளக்கமளித்து வருகிறது. இதற்கிடையே E20 பெட்ரோலால் மைலேஜ் குறைவதாக எழும் புகார்களுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளை மட்டும் சார்ந்தது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது.

    மைலேஜ் குறைவு

    அதில் மேலும், "மைலேஜ் என்பது எரிபொருளை மட்டும் சார்ந்தது அல்ல. வாகனம் ஓட்டும் முறை, போக்குவரத்து நிலை, வாகன பராமரிப்பு, டயர் பிரஷர் மற்றும் ஏசி பயன்பாடு ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. E20 பெட்ரோல் விரிவான சோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மைலேஜ் என்பது வாகனத்தின் ஒட்டுமொத்த நிலை மற்றும் அதன் சூழலை பொறுத்தே அமையும்" என்று தெரிவித்துள்ளது.

    Advertisement

    20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோலால் வாகனங்களின் மைலேஜ் குறையும் என்று சமீப காலமாக தகவல்கள் பரவி வந்தன. மேலும், எரிபொருள் பயன்பாடு, பழைய வாகனங்களில் E20 பெட்ரோல் செட் ஆகுமா என பல கேள்விகள் எழுந்துள்ளன. அதில் மைலேஜ் குறைபாடு தான் பலருக்கும் மிக முக்கியமான கேள்வியாக எழுந்திருந்தது.

    புதிய விளக்கம்

    இதற்கு முன்பு மத்திய அரசு மைலேஜ் குறையும் என்றே சொல்லியிருந்தது. அதாவது சில வாகனங்களில் E20 பெட்ரோல் பயன்படுத்தும்போது மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் வரை குறையும் என்பதை ஒப்புக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தான் மைலேஜ் என்பது வெறுமன E20ஐ பொறுத்து மட்டும் இருக்காது என்றும் அது பல விஷயங்களை பொறுத்து அமையும் என்றும் மத்திய அரசு இப்போது விளக்கமளித்துள்ளது.

    Advertisement

    ஒரே வாகனத்தில் கூட வெவ்வேறு சூழ்நிலைகளை பொறுத்து மைலேஜ் மாறுபடலாம். குறிப்பாக வாகனம் ஓட்டும் விதம் மற்றும் வேகம், போக்குவரத்து நெரிசல், வாகன பராமரிப்பு, டயர்களில் சரியான பிரஷர் இருப்பது என பல காரணங்களை பொறுத்து மைலேஜ் மாறுபடும்.

    விலை எகிறி இருக்கும்

    இதற்கிடையே E20 தொடர்பாக கடந்த வாரம் மத்திய அரசு விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தது. உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த காலங்களில், எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாகவே விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்ததாக அரசு தெரிவித்தது. கச்சா எண்ணெய் கூடை விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 135 டாலரை எட்டியபோது, 100% பெட்ரோல் மட்டும் இருந்தால் அது லிட்டருக்கு சுமார் ரூ.125 வரை உயர்ந்திருக்கக்கூடும் என மத்திய அரசு கூறியுள்ளது.

    Advertisement

    இருப்பினும், E20 பெட்ரோல் காரணமாகவே பெட்ரோல் விலை அந்தளவுக்கு உயராமல் இருந்ததாகவும் 20 சதவீத எத்தனால் கலப்பு கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை குறைக்க உதவியதாகவும் மத்திய அரசு விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..

    English Summary

    Centre says E20 petrol is not the only factor affecting vehicle mileage(E20 Petrol மைலேஜ் குறைவு குறித்து மத்திய அரசு கொடுத்த விளக்கம்): E20 Petrol Mileage drop latest news in tamil.