மோடிக்கு புது தலைவலி! E20 பெட்ரோலுக்கு எதிராக டெல்லியில் இன்று உண்ணாவிரதம்! கெஜ்ரிவால் புது பிளான்

  • டெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக அடுத்த சம்பவம் தொடங்கி உள்ளது. பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்தை தொடங்குகிறார். அதேபோல் தெஹ்சின் பூனவலா தனியாக பேரணி சென்று உண்ணாவிரதத்தை தொடங்க உள்ளார். இது மத்திய அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    ஈரான் போர் காரணமாக பெட்ரோலுக்கு தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் வந்தது. இதனால் பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    Advertisement

    நம் நாட்டில் பெட்ரோலில் 10 சதவீதம் வரை மட்டுமே எத்தனால் கலக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக 10 சதவீதம் வரை எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார். இதன்மூலம் நாட்டில் பெட்ரோல் பயன்பாட்டை சற்று குறைக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கலாம் என்று அவர் கூறினார்.

    ஆனால் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்படுத்தும்போது மைலேஜ் குறையும் என்ற புகார்கள் உள்ளன. அதுமட்டுமின்றி வாகனங்களில் சில பாகங்களில் பிரச்சனைகள் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனை நிதின் கட்காரியும் ஒப்புக்கொண்டுள்ளார். இ20 பெட்ரோல் பயன்படுத்தும்போது வாகனங்களின் ஆண்டை பொறுத்து 2 முதல் 6 சதவீதம் வரை மைலேஜ் குறையும் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதில் மத்திய அரசும், நிதின் கட்காரியும் உறுதியாக உள்ளனர்.

    Advertisement

    இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் இ20 பெட்ரோலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இன்று இந்த பிரசாரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்குகிறார். 'E20க்கு எதிரான தேசிய டவுன் ஹால் என்கிற பெயரில் இந்த பிரசாரம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து ஆதரவளிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    அதேபோல் இ20 பெட்ரோலுக்கு எதிராக அரசியல் விமர்சகரான தெஹ்சின் பூனவாலாவும் உண்ணாவிரத போராட்டத்தை இன்றுஅறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 5ம் தேதியே தெஹ்சின் பூனவாலா போராட்டம் நடத்திய நிலையில் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தை அறிவிததுள்ளார். அதன்படி இன்று அவர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் சென்று அங்கு உண்ணாவிரதத்தை தொடங்க உள்ளதார்.

    Advertisement

    உண்ணாவிரதத்தை இன்று தொடங்கும் தெஹ்சின் பூனவாலா மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்தவர். பிரபலமான அரசியல் விமர்சகர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று கவனம் ஈர்த்து வருபவர். இவர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்றும் கூறப்படும் நிலையில் இவரத சகோதரர் பெயர் ஷெசாத் பூனாவாலா. இவர் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வருகிறார்.

    ஏற்கனவே 'நீட்' தேர்வுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கினர். சமூக செயற்பாட்டாளர் சேனாம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி வந்தனர். இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்தது. இந்த போராட்டம் பெரும் ஆதரவை பெற்றது. இதனால் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில இ20 பெட்ரோலுக்கு எதிரான பிரசாரத்தையும், தெஹ்சின் பூனவாலா உண்ணாவிரதத்தையும் தொடங்கி இருப்பது மத்திய பாஜக அரசுக்கு அடுத்த சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    E20 Ethanol Protest: After the 'Cockroach Janta Party' protest concluded in Delhi now new agitation against the Central Government has begun. Aam Aadmi Party (AAP) convener Arvind Kejriwal is launching a campaign in Delhi today to oppose the blending of up to 20 percent ethanol in petrol. Meanwhile, Tehseen Poonawalla is set to hold a hunger strike.