டெல்லியில் குலுங்கிய கட்டிடங்கள்.. வீடுகளை விட்டு ஓடிய மக்கள்! நில அதிர்வு காரணமாக அச்சம்!

  • டெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்று மாலை இந்து குஷ் மலைப்பகுதியில் 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நில அதிர்வுகளால் மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர்.

    Advertisement

    இன்று மாலை சுமார் 7:12 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    நில அதிர்வுகளை உணர்ந்தவுடன், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். சில வினாடிகள் நீடித்த இந்த அதிர்வுகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் மையம் மற்றும் ஆழம் குறித்த கூடுதல் விவரங்களை தேசிய நில அதிர்வு மையம் (NCS) ஆய்வு செய்து வருகிறது.

    English Summary

    earthquake was felt in Delhi and surrounding areas this evening. People were gripped by fear due to the sudden tremors. Reports indicate that the earthquake was felt around 7:12 PM today. Preliminary data suggests the quake registered a magnitude of 4.4 on the Richter scale.