பஞ்சாயத்தா? அதெல்லாம் ஒன்னுமில்லையே! சலசலப்புகளுக்கு விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்!

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார்களை அடுக்கி வருகின்றன. இப்படி இருக்கையில், தேர்தல் ஆணையர்கள் இருவர், தலைமை தேர்தல் ஆணையர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இதை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தற்போது மறுத்துள்ளன.

    Advertisement

    SIR பணிகள், இதர தேர்தல் நடவடிக்கைகளில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, குறிப்பாக தலைமை தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால், இதையெல்லாம் கண்டும் காணாமல்.. மத்திய அரசு அப்படியே விட்டுவிட்டது. மத்திய அரசு எதிர்பார்த்தபடி, இந்த பிரச்சனை அப்போதைக்கு பெருசாக பேசப்பட்டாலும், பின்னர் அமுங்கிவிட்டது.

    Advertisement

    ஆனால், தற்போது அதைவிட பெரிய பிரச்சனை எழுந்திருக்கிறது. இந்த முறை குற்றச்சாட்டுகளை வைத்தது எதிர்க்கட்சிகள் கிடையாது, சக தேர்தல் ஆணையர்கள்தான்.

    அதாவது கடந்த 10 மாதங்களில் தங்களுக்கு தெரியாமல் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதற்கு எதிராக 14 முறை தங்கள் கண்டனத்தை பதிவு செய்ததாகவும் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர். இந்த விஷயத்தை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகம் வெளியிட்டிருந்தது.

    பிரச்சனை இதுதான்.. இந்த முறை குற்றச்சாட்டுகளை வைத்தது தேர்தல் ஆணையர்கள்! எனவே இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரையும், மத்திய அரசையும் எதிர்க்கட்சிகள் வெச்சு செய்ய தொடங்கியிருக்கின்றன. ஆனால், தேர்தல் ஆணைய வட்டாரமோ.. அதெல்லாம் ஒன்னுமில்லை.. எல்லா முடிவும் எல்லோரையும் கேட்டுதான் எடுத்திருக்கிறோம் என்று சமாதானம் சொல்லியிருக்கிறது.

    Advertisement

    தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் இந்த ஊடக செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான முடிவுகள் உட்பட தேர்தல் ஆணையத்தின் அனைத்து முக்கிய முடிவுகளும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இரு தேர்தல் அணையர்களின் ஒப்புதலோடு முழுக்க முழுக்க ஒரே மனதாகவே எடுக்கப்பட்டன என்று அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

    இருப்பினும் முடியாது, முடியாது.. என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்திருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன், ஞானேஷ் குமாரை தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுயுத்தியுள்ளார். இதற்காக எதிர்க்கட்சிகள் கையெழுத்து போட்ட தீர்மானத்தை மாநிலங்களவையில் உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், கபில் சிபில், உத்தவ் தாக்ரே அணியின் எம்பி சஞ்சய் ராவத் என எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விஷயத்தில் மத்திய அரசை ரவுண்டு கட்டி வருகின்றனர்.

    Topics: #eci #india

    English Summary

    ECI denies internal rift: Opposition parties have already been leveling a series of complaints against Chief Election Commissioner Gyanesh Kumar. Amidst this, allegations raised by two Election Commissioners against the Chief Election Commissioner have sparked a debate. Election Commission sources have now denied these allegations.