வாக்காளர் பட்டியலில் Gen-Z வாக்காளர்களை சேர்க்க விரும்பாத தலைமை தேர்தல் ஆணையர்? CJP குற்றச்சாட்டு

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையரின் முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையர்கள் எழுப்பியிருந்த ஆட்சேபனை குறித்த தகவல்கள் கடந்த இரு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இளம் வாக்காளர்களை குறிவைப்பதாகவும் இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை எனவும் கரப்பான் பூச்சி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

    Advertisement

    தேர்தல் ஆணையத்துக்குள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியல், புதிய வாக்காளர்களை சேர்த்தல், பெயர்களை நீக்குதல், உள்ளிட்ட விவகாரங்களில் சாந்து மற்றும் ஜோஷி ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

    Advertisement

    24 முறை

    கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட சில முடிவுகள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக தேசியளவில் இது மிக பெரிய விஷயமாக வெடித்துள்ளது.

    இதுபோல ஆலோசனை வழங்குவது வழக்கமான நடைமுறை தான் என்றும் இறுதி முடிவுகள் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சொல்லப்பட்டது. இருப்பினும், இதை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள், ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இதில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

    Advertisement

    Gen-Z வாக்காளர்கள் குறி

    இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் முறைகேடு தொடர்பாக எழுந்த புகார்கள் குறித்துக் கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞனேஷ் குமார் மீது கரப்பான் பூச்சி கட்சி சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஞனேஷ் குமார் Gen-Z வாக்காளர்களை குறிவைக்கிறார் என சாடிய கரப்பான் பூச்சி கட்சி, வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் சேர்க்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    48 மணி நேரம் கெடு

    மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய 48 நேரம் கெடுவையும் கரப்பான் பூச்சி கட்சி விதித்திருந்தது. ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யவில்லை என்றால் நாடு முழுக்க போராட்டம் நடக்கும் என சிஜேபி எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் தான் மிக பெரிய தேசவிரோதி என்றும் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனவும் சிஜேபி கூறியுள்ளது. இது மட்டுமின்றி ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    Advertisement

    இந்தியா ஜனநாயகத்திற்கு அவரே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார் என கூறியுள்ள சிஜேபி, அமித் ஷா உத்தரவுகளின்படியே ஞானேஷ் குமார் செயல்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்கள்

    மேலும், 2024 லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையை பெற முடியாததால் பாஜக பதற ஆரம்பித்துவிட்டதாகவும் இதனால் பிராந்திய தலைவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக 2024 லோக்சபா தேர்தலில் ஒரே அணியாக பிரச்சாரம் செய்தவர்கள் மட்டும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளது. இதில் ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் ஆகியோரின் தோல்விகளை குறிப்பிட்டு, அவர்களின் தொகுதிகளில் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

    English Summary

    Cockroach janata party has made allegations against Chief Election Commissioner Gyanesh Kumar(தேர்தல் ஆணையம் மீது கரப்பான் பூச்சி கட்சி குற்றச்சாட்டு): Election Commission issue latest news in tamil.