Gen Z இளைஞர்களின் வாக்குரிமை பறிப்பு? எஸ்ஐஆரை விடுங்க.. எஸ்எஸ்ஐர் பற்றி தெரியுமா! வெடிக்கும் சர்ச்சை

  • டெல்லி: 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு திருத்த நடைமுறை 2024ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தொடங்காதது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சிக்கியுள்ள நிலையில், இதுவும் பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    கடந்த மூன்று நாட்களாகவே தேர்தல் ஆணையம் தொடர்பாக வெளியாகி வரும் தகவல்கள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இரு தேர்தல் ஆணையர்கள் எழுதியிருந்த 14 ஆட்சேபனை கடிதங்கள் குறித்த விவரங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சில புதிய தகவல்களை ஆங்கில ஊடகமான எகானிமக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    Advertisement

    சர்ச்சை

    வழக்கமா எஸ்ஸ்ஆர் அறிவிப்பு மே, ஜூன் காலகட்டத்தில் வெளியாகும் நிலையில், 2026-27 ஆண்டுக்கான நடைமுறை இதுவரை வெளியாகவில்லை. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் இது தொடர்பாகவும் கடிதம் எழுதியிருந்தனர். 18 வயதை கடந்த வாக்காளர்களை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க எஸ்எஸ்ஆரை மீண்டும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியதாகவும், இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    எஸ்எஸ்ஆர் என்றால் என்ன?

    இந்த எஸ்எஸ்ஆருக்கும் எஸ்ஐஆருக்கும் வேறுபாடுகள் உள்ளன. எஸ்ஐஆர் எனப்படுவது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விரிவான நடவடிக்கை. ஆனால், எஸ்எஸ்ஆர் அதுபோல அல்லை. இது வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் வழக்கமான ஒரு நடைமுறை மட்டுமே! குறிப்பாக புதிதாக 18 வயதை எட்டியவர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

    Advertisement

    தற்போதைய விதிகளின்படி ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 அல்லது அக்டோபர் 1 ஆகிய நான்கு தேதிகள் கட் ஆஃப் தேதிகளாக வைக்கப்பட்டு, 18 வயதை எட்டும் இளம் தலைமுறையினர் வாக்காளராக பதிவு செய்ய தகுதி பெறுகின்றனர். ஆனால் ஆண்டு தோறும் நடக்கும் சிறப்பு முகாம்களில் ஜனவரி 1-ம் தேதியை கட் ஆப் தேதியாக ஆகக் கொண்டு நடைபெறுகிறது. அதாவது தகுதி பெறவிருக்கும் இளைஞர்கள் ஃபார்ம் 6 மூலம் முன்கூட்டியே விண்ணப்பிக்கவும் ஏற்பாடு உள்ளது.

    பேசுபொருள்

    இதுதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது கடைசியாக 2024ல் தான் இந்த எஸ்எஸ்ஆர் தொடர்பான அறிவிப்புகள் வெளியானது.. அதன் பின்னர் எஸ்எஸ்ஆர் மேற்கொள்ளப்படவில்லை. பல மாநிலங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், வழக்கமான எஸ்எஸ்ஆர் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். அதுவே இப்போது பேசுபொருளாகியுள்ளன.

    Advertisement

    கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இருவரான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் வாக்காளர் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, Form 6ல் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் தொடர்பாக குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். சில நடவடிக்கைகள் தங்களது ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்தச் சூழலில் எஸ்எஸ்ஆர் செய்யப்படாததும் பெரிதாக வெடித்துள்ளது.

    எஸ்எஸ்ஆர் தாமதம்

    எஸ்எஸ்ஆர் தாமதம் காரணமாக, புதிதாக 18 வயதை எட்டிய அனைவரும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர முடியாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. ஞானேஷ் குமார் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக ஏற்கனவே பல விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் நிலையில், இதுவும் அதில் இணைந்துள்ளது.

    Advertisement

    இளைஞர்களின் வாக்குரிமையை தடுக்கும் வகையில் அரசும் தலைமை தேர்தல் ஆணையரையும் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 18 வயது வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது.

    Gen Z வாக்காளர்கள்

    இளைஞர் போராட்டங்களின் காரணமாக Gen Z வாக்காளர்கள் மீது அரசு அச்சம் கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    ஏற்கெனவே எஸ்ஐஆர் நடவடிக்கை மற்றும் தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், தற்போது புதிய 18 வயது வாக்காளர்களை சேர்க்கும் எஸ்எஸ்ஆரும் ஏன் தாமதமாகிறது என்ற கேள்வியும் அந்த விவாதத்தில் இணைந்துள்ளது.

    English Summary

    A new report has raised questions over why the Special Summary Revision for adding newly eligible 18-year-old voters has not resumed after 2024(தேர்தல் ஆணையத்தில் வெடித்த பெரிய சர்ச்சை): Election Commission issue latest news in tamil.