என்னது ரூ.529 கோடியா? தமிழ்நாடு உள்பட 5 சட்டசபை தேர்தலில் பாஜக செலவிட்டதை பாருங்க? அடேங்கப்பா

  • டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் என 4 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. இதற்காக மொத்தம் ரூ.529 கோடியை பாஜக செலவிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மேற்குவங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பாஜக குறைவாக செலவழித்துள்ளது தெரியவந்துள்ளது.

    Advertisement

    ஒவ்வொரு சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்த பிறகும் அந்தந்த கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தங்களின் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    Advertisement

    அந்த வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்துக்கான செலவு கணக்கை பாஜக சமர்ப்பித்துள்ளது.

    மொத்த செலவு ரூ.529 கோடி

    தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தலில் செலவான தொகை குறித்த பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி 5 தேர்தல்களுக்கும் மொத்தம் பாஜக ரூ.529 கோடியை செலவழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மற்ற கட்சிகளை விட அதிக செலவாகும்.

    மே.வங்கத்திற்கு ரூ.259.34 கோடி

    குறிப்பாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த மாநிலத்தில் மட்டும் பாஜக ரூ. 286.99 கோடி செலவிட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் ரூ. 27.65 கோடி மட்டுமே செலவழித்துள்ளது. இந்த 2 கட்சிகளுக்கும் இடையேயான செலவு வித்தியாசம் ரூ. 259.34 கோடியாகும்.

    Advertisement

    மேலும் 5 தேர்தல்களிலும் பாஜக மேற்கொண்ட மொத்த செலவில் பாதிக்கும் மேலான தொகையாக ரூ. 286.99 கோடி மேற்கு வங்கத்தில் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதற்கு கைமேல் பலனாக மேற்கு வங்கத்தில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி ஆட்சியை பிடித்துள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    அசாமிற்கு ரூ.96.27 கோடி

    இதற்கு அடுத்தப்படியாக பாஜக அசாம் தேர்தல் செலவிற்காக ரூ.96.27 கோடியை செலவிட்டுள்ளது. காங்கிரஸ் ரூ.30 கோடி மட்டுமே செலவழித்துள்ளது. இருகட்சிகளுக்கான செலவு வித்தியாசம் ரூ.66.27 கோடியாக உள்ளது. இங்கும் பாஜக ஆட்சியை பிடித்தது. மொத்தம் 126 தொகுதிகளில் 82 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    Advertisement

    கேரளாவிற்கு ரூ.82.67 கோடி

    கேரளாவில் காங்கிரஸ் கட்சி ரூ. 27.67 கோடி செலவிட்டதாக கூறப்படும் நிலையில் பாஜக ரூ. 82.67 கோடியை செலவு செய்துள்ளது. காங்கிரஸை விட பாஜக ரூ55 கோடி அதிகமாக செலவிட்டு இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    தமிழகத்துக்கு ரூ.51.56 கோடி

    தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தேர்தல் செலவாக மொத்தம் ரூ.51.56 கோடியை பாஜக செலவிட்டுள்ளது. இதில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வென்றது. ஊட்டியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் நூலிழை வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளார்.

    Advertisement

    புதுச்சேரியில் ரூ.11.95 கோடி

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக ரூ.11.90 கோடி வரை செலவிட்டுள்ளது. இங்கு பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றாலும் கூட்டணி கட்சியான ரங்கசாமியின் அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சி 12 இடங்களில் வாகை சூடியது. இதனால் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    BJP Election Expenditure: Assembly elections were held in four states-Tamil Nadu, West Bengal, Kerala, and Assam-as well as in the Union Territory of Puducherry. While the BJP reportedly spent a total of Rs.529 crore across these regions, it has been revealed that the party's expenditure in Tamil Nadu was lower compared to states like West Bengal, Kerala, and Assam.