பிரதமர் அம்பானி அவர்களே.. மன்னிச்சிடுங்க! எலான் மஸ்க் அடுத்து சொன்ன வார்த்தை! ஸ்டார்லிங்க் சர்ச்சை

  • டெல்லி: இந்தியாவில் சாட்டிலைட் வழி இணைய சேவையை வழங்குவதற்கான அனுமதி தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், எலான் மஸ்க் மீண்டும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியை விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை குறிப்பிடுவதற்கு பதிலாக, அம்பானியை "இந்தியாவின் உண்மையான முதலாளி" என்று குறிப்பிட்டு அவர் போஸ்ட் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங் சேவையை இந்தியாவுக்கு கொண்டு வர நீண்ட காலமாக முயன்று வருகிறார். இருப்பினும், சில காரணங்களால் ஸ்டார்லிங் சேவையை அவரால் இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களாக எலான் மஸ்க் இது தொடர்பாக பதிவிட்டு வரும் போஸ்ட்கள் விவாதமாகி வருகிறது.

    Advertisement

    எலான் மஸ்க்

    இதற்கிடையே மீண்டும் அம்பானியை குறிப்பிட்டு எலான் மஸ்க் கடிதம் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் மஸ்க், "அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களே, இந்தியாவின் உண்மையான முதலாளி நீங்கள்தான் என்பதை உணராமல் போனதற்கு எனது பணிவான மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அதை ஏற்று கொள்ளுங்கள்.

    அம்பானி!

    இந்திய மக்களை தொடர்ந்து ஏகபோக ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க விரும்புவீர்கள் என்பது இயல்புதான். இருப்பினும், ஸ்டார்லிங்க்கும் சந்தைக்கு வர அனுமதிப்பீர்களா? இன்னுமே இந்தியாவின் பல பகுதிகளில் இணைய வசதி இல்லை. இதனால் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளும் சிறு வணிகர்கள் தங்களது பொருட்களை உலக சந்தையில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் பாதிக்கப்படுகிறது.. ஸ்டார்லிங்க் சேவை அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்" என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க் இதுபோல அம்பானியை பிரதமர் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ள போஸ்ட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    Advertisement

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் சாட்டிலைட் வழி இணைய சேவையை வழங்குவதற்கான முயற்சியில் உள்ளது. இதே பிரிவில் பார்தி ஏர்டெல் ஆதரவு பெற்ற யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் உள்ளன.

    இந்த மூன்று நிறுவனங்களுக்கும் மத்திய அரசு தொலைத்தொடர்பு உரிமங்களை வழங்கியுள்ளது. இருப்பினும், அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று சேவைகளை தொடங்குவதற்கு முன்பு, அரசின் பாதுகாப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்திருப்பதை நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும். இதற்கான பாதுகாப்பு மதிப்பீடு நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    பின்னணி

    இந்தச் சர்ச்சை புதன்கிழமை தொடங்கியது. இந்தியாவில் உள்ள சில தொழிலதிபர்கள் தங்களது ஏகபோக ஆதிக்கத்தை பாதுகாப்பதற்காக ஸ்டார்லிங்கின் சேவையை தடுத்து வருவதாக எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டினார். இது இந்திய மக்களுக்கு எதிரான செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    Advertisement

    இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்தது. சாட்டிலைட் இணைய சேவைகள் உட்பட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் நியாயமான, பாகுபாடற்ற அனுமதி வழங்கும் நடைமுறையை அரசு கொண்டுள்ளதாகவும் அமைச்சகம் விளக்கியது.

    எலான் மஸ்க் விளக்கம்

    இதற்கிடையே 165க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் உரிமம் பெற்றுள்ளதாகவும், இந்திய அரசின் சட்டங்கள் மற்றும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காக ஐந்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருவதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். அப்படியிருக்க ஏன் இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    இயற்கைப் பேரிடர்களின்போது வழக்கமான தகவல் தொடர்பு அமைப்புகள் செயலிழந்த நிலையில், உயிர்களை காப்பாற்ற ஸ்டார்லிங்க் உதவியுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தியாவில் செயல்பட அனுமதி கிடைத்தால், நாடு முழுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரது உயிர்களை காப்பாற்ற உதவ முடியும் என்பதும் அவரது வாதமாகும்.

    English Summary

    Elon Musk has sparked a fresh controversy by calling Reliance chairman Mukesh Ambani the real boss of India in a sarcastic post(அம்பானியை விமர்சித்த எலான் மஸ்க்): Elon Musk on Mukesh Ambani latest news in tamil.