டெல்லி டூ நேபாளம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் என்ஜின் கோளாறு! பதறிய 150 பயணிகள்.. என்ன நடந்தது?

  • டெல்லி: டெல்லியில் இருந்து காத்மாண்டுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு கண்டறியப்பட்டதால், விமனாம் மீண்டும் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில் நுட்பக்கோளாறு கண்டறியப்பட்டதால், விமானத்தில் பயணம் செய்த 150 பயணிக்ளும் பீதி அடைந்தனர்.

    Advertisement

    டெல்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 2.42 ம்ணிக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ 320 என்ற விமனம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150 பயணிகளுடன் புறப்பட்டது.

    Advertisement

    பதறியடித்து வெளியேறிய பயணிகள்

    விமானம் டேக் ஆப் ஆகி சென்ற சிறிது நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனால், மேற்கொண்டு விமானத்தை இயக்குவது சரியாக இருக்காது என கருதிய விமானி, மீண்டும் டெல்லிக்கே திரும்ப முடிவு செய்தார். உடனடியாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலமையை எடுத்துக்கூறி தரையிறங்க அனுமதி கேட்டார்.

    அனுமதி கிடைத்தத்தும் உடனடியாக விமனாம் டெல்லி விமான நிலையத்திற்கே வந்து அவசரமாக தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் உடனைடியாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளும் பதறியடித்துக்கொண்டு அவசர அவசரமாக விமானத்தை விட்டு வெளியேறினர். விமானம் தரையிறங்கியதும் தயாராக இருந்த தொழில்நுட்பக்குழுவினர், விமானத்தில் கோளாறை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    Advertisement

    ஏர் இந்தியா விளக்கம்

    இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் இருந்து காத்மாண்டு நகருக்கு ஏ-1219 என்ற விமானம் புறப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    சிறிது நேரத்தில் மாற்று விமானத்தில் பயணிகள் அனைவரும் காத்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3 ல் இருந்து, மாற்று விமானம் 6.17 மணிக்கு புறப்பட்டு சென்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Air India flight bound for Kathmandu from Delhi was diverted back to Delhi after a technical glitch was detected. The 150 passengers on board were alarmed when the issue arose shortly after takeoff.