கோடிக்கணக்கில் கொட்டப் போகுது! மாதச் சம்பளதாரர்களுக்கு சர்ப்ரைஸ்! பிஎஃப் வட்டி தொகை.. எப்போது வரும்?

  • டெல்லி: இந்தியாவில் கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பிஎஃப் வட்டி தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. 2025 2026 ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி தொகை வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் தகுதியான சந்தாதாரர்களின் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இபிஎஃப்ஓ என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறது. மேலும் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் சந்தா தொகையை செலுத்துகின்றன.

    Advertisement

    இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் நிதி ஆகியவை தங்கள் கணக்கில் பராமரிக்கப்படும். பணியில் இருந்து ஓய்வு பெறும் போது இந்த நிதி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அவசர தேவைக்காகவும் இபிஎஃப்ஓ பணத்தை தொழிலாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    இபிஎஃப்ஓ

    தொழிலாளர்கள் அவர்களது கணக்கில் பராமரிக்கப்படும் தொகைக்கும் சேர்த்து வட்டியும் அளிக்கப்படுகிறது இந்த தொகையையும் சேர்த்து தொழிலாளர்கள் பிற்காலத்தில் எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலையில். EPFO தற்போது தனது சேவைகளை முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றியுள்ளது. புதிய "EPFO 3.0" முறை மூலம், கோர் பேங்கிங் மற்றும் API இணைப்புகள் மூலம் உறுப்பினர்கள் தங்கள் பண பரிமாற்றங்களை உடனுக்குடன் பார்க்க முடியும். இதனால் அலுவலக சிக்கல்கள் குறைந்து, நேரடி வசதி கிடைக்கும்.

    Advertisement

    பிஎஃப் வட்டி

    அதோடு சேர்த்து ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்துக்கு வட்டி வரவு வைக்கப்படுவதையும் ஆன்லைன் முறைக்கு மத்திய அரசு மாற்றி இருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் EPF கணக்கில் மத்திய அரசு சார்பில் வட்டி வரவு வைக்கப்படுவது வழக்கம். பொதுவாக செப்டம்பர் மாதத்தில் தான் வட்டியானது வரவு வைக்கப்படும். இந்த நிலையில் இந்தாண்டு வட்டி வரவு வைப்பு குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

    பிஎஃப் வட்டி ஜூலை 15

    தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த ஆண்டு EPF வட்டி வரவு செயல்முறை முழுமையாக தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு வேகமாக பயனாளிகளின் கணக்குகளில் வட்டித்தொகை சேர்க்கப்படும். இதனால் வட்டி வரவு தொடர்பான தாமதங்கள் குறையும் தற்போதைய மோடி அரசின் கீழ் EPFO சேவைகள் வெளிப்படையாகவும் விரைவாகவும் செயல்படுகிறது.

    Advertisement

    1.44 லட்சம் கோடி

    இந்த நிதியாண்டில் இபிஎப் கணக்குகளில் வழங்கப்பட உள்ள மொட்ட வட்டித் தொகை சுமார் 1.44 லட்சம் கோடியாக இருக்கும். இது இந்தியாவின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான பிஎப் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. EPF கணக்கு வைத்திருக்கும் அனைவரும், ஜூலை 15-ஆம் தேதிக்குப் பிறகு தங்களது EPFO கணக்கை ஒருமுறை சரிபார்த்து, வட்டித் தொகை வரவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்" என்றார்.

    சம்பளதாரர்கள்

    EPFO வட்டித் தொகை சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சந்தாதாரர்கள் மிகவும் எளிதாக சரிபார்க்கலாம். EPFO-வின் அதிகாரப்பூர்வ இணையதளம், UMANG செயலி அல்லது EPFO இ-பாஸ்புக் வசதி மூலம் தங்களது கணக்கில் இருப்பு மற்றும் வட்டித் தொகையை சரிபார்க்க முடியும். வட்டி வரவு செய்யப்பட்ட பிறகு, இ-பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்து கணக்கை சரிபார்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதில், ஏதேனும் வேறுபாடு இருந்தால், EPFO-வின் அதிகாரப்பூர்வ தளத்தில் புகார் பதிவு செய்தோ, அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்கின்றனர் அதிகாரிகள்.

    English Summary

    EPFO to credit FY2025-26 PF interest by July 15. Check latest update, interest rate and balance verification methods.