ஆந்திராவில் பற்றி எரிந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.. பயங்கர சத்தமும் கேட்டதால் இரவில் பதறிய மக்கள்

  • விசாகப்பட்டினம்: ஆந்திராவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு குபுகுபுவென தீ பற்றி எரிந்தது. அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    Advertisement

    ஆந்திராவில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள அந்த எண்ணெய் ஆலையில் நேற்று இரவு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக குபு குபுவென தீ பற்றி எரிந்தது.

    Advertisement

    கொழுந்து விட்டு எரிந்த தீயை தொடர்ந்து அப்பகுதியே புகை மண்டலம் போல காட்சி அளித்தது. இதனால் அருகில் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். எண்ணெய் ஆலையில் உள்ள சல்பர் டேங்கில் தீ பிடித்தாக சொல்லப்படுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பதை பதைப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து விசாகப்பட்டினம் காவல் ஆணையர் சங்கரப்ரதா பகச்சி கூறுகையில், "தீ விபத்து காரணமாக சுத்திகரிப்பு நிலையத்தின் பிற பகுதிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை" என்றார்.

    Advertisement

    தீ விபத்து குறித்து இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- பிட்ச் டேங்க் பகுதியில் தீ பிடித்தது. குறுகிய நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிரிழப்பும் இல்லை. சுத்திகரிப்பு நிலையத்தின் அனைத்து யூனிட்களும் சீராக இயங்கி வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

    English Summary

    A sudden fire broke out at an oil refinery in Andhra Pradesh. The incident was accompanied by a loud explosion, and the facility was soon engulfed in flames. The area became blanketed in thick smoke, causing severe distress to the local residents.