கண்ணுக்குள் வளர்ந்த பல்.. உலகில் யாருக்கும் இல்லாத பாதிப்பு.. 16 வயது இந்திய சிறுவனுக்கு வினோதம்

  • டெல்லி: மருத்துவ உலகில் பல நேரங்களில் நாம் கனவிலும் யோசிக்காத சம்பவங்கள் நடக்கும். இப்படியெல்லாம் நடக்குமா என நாம் யோசித்து கூட இருக்க மாட்டோம். ஆனாலும் அதுபோன்ற வினோதமான பாதிப்புகள் எல்லாம் கூட ஏற்பட்டுள்ளன. இப்போதும் அப்படியொரு அரிய வகை பாதிப்பு குறித்த தகவலே இணையத்தை பரபரப்பாக்கியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    இந்தியாவில் 16 வயது சிறுவனின் கண்ணுக்குள் முழுமையாக வளர்ந்த பல் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுவன் இடது கண்ணுக்கு மேலே வீக்கம் இருப்பதாக மருத்துவமனைக்கு சென்றுள்ளான். அப்போது சிறுவனை பரிசோதித்தபோது இந்த அரிய பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

    Advertisement

    வீக்கம்

    சிறுவனின் இடது கண்ணுக்கு மேலே முதலில் லேசான வீக்கம் மட்டுமே இருந்துள்ளது. ஆனால், நாளடைவில் கண் இமைக்கும் புருவத்துக்கும் இடையில் தோலின் வழியாக இரண்டு கடினமான வெள்ளை புள்ளிகள் வெளியே வர தொடங்கியுள்ளன. இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனுக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது சிடி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்தபோது, கண்ணின் மேற்பகுதியில் உள்ள கண் குழிக்குள் முழுமையாக வளர்ந்த பல் இருப்பது உறுதியானது. இந்த பகுதியை மருத்துவர்கள் 'சுப்பீரியர் ஆர்பிட்' (Superior Orbit) என்று அழைக்கின்றனர்.

    கார் திருட்டு போகக்கூடாதாம்.. 2வது மாடியில் ஸ்கார்பியோவை தூக்கி வைத்த நபர்.. வினோதம்!
    Advertisement

    இது என்ன எக்டோபிக் பல்?

    இந்த அரிய பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை அமெரிக்க கண் மருத்துவ அகாடமியில் வெளியிடப்பட்டுள்ளது. பற்கள் இயல்பாக உருவாக வேண்டிய வாய்ப்பகுதியை தவிர்த்து, வேறு இடத்தில் உருவாவதற்கு அல்லது முளைப்பதற்கு 'எக்டோபிக் பல்' (Ectopic Tooth) என்று பெயர். இந்த ஆய்வின் இணை ஆசிரியரான டாக்டர் மேகனா தன்வார் கூறுகையில், "கண் குழியின் மேற்பகுதியில் எக்டோபிக் பல் கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, இந்த குறிப்பிட்ட பகுதியில் பல் வளர்ந்ததாக நாங்கள் எந்தவொரு கேஸையும் பார்த்தே இல்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    முதல் கேஸ்

    வாயின் மேற்புறம் அல்லது மூக்கின் உட்பகுதி போன்ற வழக்கத்திற்கு மாறான இடங்களில் கூட பற்கள் வளர்ந்துள்ளன. இவை அரிதாக இருந்தாலும் இதுபோன்ற கேஸ்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் வளர்ச்சிக் குறைபாடு அல்லது முந்தைய காயங்கள் காரணமாக மூக்கின் உள்ளே சிலருக்கு பற்கள் வளர்ந்துள்ளன. ஆனால், இதுவரை கண் குழிக்குள் யாருக்கும் பல் வளர்ந்ததே இல்லை. இதுபோல கண்ணுக்குள் பல் வளர்ந்திருப்பது இதுவே முதல் சம்பவமாகும்!

    கனடா சிறுவனுக்கு வந்த ஆசை.. ஏஐ சொன்னபடி மலையேறியாச்சு.. உச்சியில் கண்ட காட்சி.. அங்கேதான் ட்விஸ்ட்டே

    ஆனால், இந்த சிறுவனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதே இல்லையாம். மரபணு சார்ந்த பாதிப்புகளும் இல்லை. மேலும், மண்டை ஓட்டின் வேறு எந்த பகுதியிலும் இதுபோல பற்கள் உருவாகவில்லை. அப்படியிருக்கும்போது ஒரே ஒரு பல் மட்டும் தவறான இடத்தில் முளைத்திருப்பது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பல் உருவானதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்.

    Advertisement

    அகற்றம்

    இதற்கிடையே மருத்துவர்கள் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்து பல்லை அகற்றினர். பல் அகற்றப்பட்ட பிறகே வீக்கம் குறைந்துள்ளது. பல்லை சரியான நேரத்தில் அகற்றாமல் இருந்திருந்தால் அது தேவையில்லாமல் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கும். இதன் மூலம் உலகிலேயே முதல்முறையாக கண்ணுக்குள் பல் வந்த கேஸ் இந்தியாவில் பதிவானது. மேலும், அந்த பல் வெற்றிகரமாகவும் அகற்றப்பட்டுள்ளது.

    English Summary

    Doctors in India discovered a fully developed tooth inside the upper eye socket(கண்ணுக்குள் வளர்ந்த பல்): Tooth Found Inside Eye latest news in tamil.