டெல்லி: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் சமீபத்திய அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து பயணித்த ஒரு முகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு இளைஞர் விஜய்யுடன் செல்லும் இடமெல்லாம் இருந்தார்.
அவர் வேறு யாருமல்ல; தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்யின் நீண்டகால பிரத்யேக ஹேர் டிசைனராகவும், ஸ்டைலிஸ்ட்டாகவும் இருந்து வரும் ஜெகதீஷ் அவஸ்தி தான்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விஜய்யின் தோற்றத்தை வடிவமைத்து வரும் ஜெகதீஷ் அவஸ்தி, இப்போது அரசியல் களத்திலும் முதலமைச்சரின் விஷுவல் ஐடென்டிட்டி பொறுப்பேற்றுள்ளார். சினிமா உலகில் இருந்து அரசியல் அதிகார மையத்துக்கு நகரும் இந்தப் பயணம் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. லியோ படத்தில் விஜய்யின் முரட்டுத்தனமான சால்ட் அண்ட் பெப்பர் லுக், வாரிசு படத்தில் கார்ப்பரேட் ஸ்டைல் தோற்றம், கோட் (GOAT) படத்தில் இளமை மற்றும் முதிர்ந்த வயது இரு கதாபாத்திரங்களுக்கும் வித்தியாசமான தோற்றம்.. இவை அனைத்துக்கும் பின்னால் ஜெகதீஷ் அவஸ்தியின் கைவண்ணமே இருந்தது. சினிமா ரசிகர்களை கவரும் வகையில் துல்லியமான ஹேர் ஸ்டைலிங் மற்றும் லுக் டிசைனை வழங்கிய அவர், தற்போது அரசியல் தலைவருக்கான முதிர்ச்சியான, கம்பீரமான தோற்றத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு மாஸ் ஹீரோவின் தோற்றம் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதைப் போலவே, ஒரு மாநில முதலமைச்சரின் பொதுத் தோற்றமும் மிக முக்கியம். சட்டமன்ற உரைகள், பொதுக்கூட்டங்கள், தேசிய தலைவர்களுடனான சந்திப்புகள் என ஒவ்வொரு தருணத்திலும் முதலமைச்சர் விஜய்யின் விஷுவல் பிராண்டிங் மக்கள் மனதில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஜெகதீஷ் அவஸ்தியின் டெல்லிப் பயணம், முதலமைச்சரின் அரசியல் பிராண்டிங் உத்தியின் ஒரு முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. சினிமாவில் ட்ரெண்டி ஹேர் ஸ்டைல்கள் உருவாக்கியவர், இப்போது தலைவரின் தோற்றத்தில் முதிர்ச்சி, நம்பகத்தன்மை மற்றும் தேசிய அளவிலான கம்பீரத்தை வெளிப்படுத்தும் வகையில் பணியாற்றி வருகிறார். நவீன அரசியலில் தோற்றம் என்பது வெறும் அழகு சாதனமல்ல; அது தகவல் தொடர்பு (Communication) கருவியாக மாறியுள்ளது. சினிமா ஆளுமையில் இருந்து அரசியல் தலைவராக மாறும் போது, இத்தகைய பின்னணி நிபுணர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சினிமா மற்றும் அரசியல் இரண்டும் இணையும் இந்த சுவாரஸ்யமான புள்ளியில், ஜெகதீஷ் அவஸ்தியின் பயணம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.திரைப்படங்களில் ஜெகதீஷின் மேஜிக்
அரசியல் பிராண்டிங்கில் புதிய அத்தியாயம்
முதலமைச்சரின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் அதிகாரப்பூர்வப் பயணங்களில் உடன் செல்வது, அவரது மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. டெல்லியில் மத்திய அமைச்சர்கள், தேசிய தலைவர்களுடன் நடைபெறும் முக்கிய சந்திப்புகளுக்கு இடையே, முதலமைச்சரின் தோற்றம் எப்போதும் சிறப்பாக இருப்பதை ஜெகதீஷ் உறுதி செய்கிறார்.