டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம்

  • டெல்லி: வளைகுடாவில் நீடித்து வரும் போர்ப் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அசுர வேகத்தில் எகிறி வருகிறது. இதன் காரணமாக விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தேவையைப் பூர்த்தி செய்யவும், தட்டுப்பாட்டைத் தடுக்கவும் பெட்ரோல், டீசல் மற்றும் ஏவியேஷன் டர்பைன் ஃபியூவல் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரிகளை மத்திய அரசு அதிரடியாக மாற்றியமைத்துள்ளது.

    Advertisement

    வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் போர் வெடித்தது. அதன் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பே நேரடித் தாக்குதல்கள் நின்றுவிட்டன. தாக்குதல்கள் நின்றாலும் கூட போர்ப் பதற்றம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஒரு பக்கம் ஹார்முஸை கடக்கும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஈரான் சொல்கிறது. மற்றொரு பக்கம் ஹார்முஸ் வழியாக எந்தவொரு கப்பலும் ஈரான் செல்லாமல் இருக்கும் வகையில் அமெரிக்காவும் முடக்கியுள்ளது.

    Advertisement

    வளைகுடா நெருக்கடி

    இந்த வளைகுடா நெருக்கடி காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாகவே ஏற்றுமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய, கடந்த மார்ச் 27ம் தேதி பெட்ரோல்- டீசல் ஏற்றுமதிக்குச் சிறப்புக் கூடுதல் கலால் வரி (SAED) முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஏற்றுமதி வரி

    இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக லாபத்திற்காக வெளிநாடுகளுக்குப் பெட்ரோல்- டீசலை அதிகளவில் ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்த இது அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த வரிகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, கடந்த மே 16 திருத்தத்திற்குப் பிறகு, தற்போது புதிய ஜூன் 1ம் தேதி வரி திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Advertisement

    கூடுதலாக எவ்வளவு?

    மத்திய அரசு இப்போது புதிய ஏற்றுமதி வரி விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஒரு லிட்டருக்கு ₹1.5 வீதம் சிறப்புக் கூடுதல் கலால் வரியாக (SAED) வசூலிக்கப்படும்.. இதற்குச் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் எதுவும் விதிக்கப்படவில்லை. டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு அதிரடியாக ₹13.5 வரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதுவும் முழுமையாகச் சிறப்புக் கூடுதல் கலால் வரியாகவே வசூலிக்கப்படும். விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் எரிபொருள் ஏற்றுமதிக்கு ஒரு லிட்டருக்கு ₹9.5 வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட புதிய வரிகள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

    Advertisement

    அதேநேரம் இந்த கூடுதல் வரி என்பது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே பொருந்தும். நம்ம ஊர் மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது இந்த வரி ஏற்றம் காரணமாக உள்ளூரில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலை உயராது. அது அப்படியே தொடரும்.

    உள்ளூரில் பாதிப்பு?

    இந்தியாவிற்குள் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தற்போதைய உள்நாட்டுக் கலால் வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், இந்திய வாகன ஓட்டிகளுக்கான எரிபொருள் விலையில் இந்த அறிவிப்பால் உடனடி பாதிப்பு எதுவும் இருக்காது என்பது சாமானிய மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு நிம்மதியான செய்தி. வெளிநாடுகளுக்குப் பெட்ரோல் டீசல் வரியை ஏற்றி, உள்நாட்டு சப்ளையை உறுதி செய்வது நல்ல விஷயம் என்றாலும் உள்ளூரில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.

    English Summary

    Central Government revised export duties on petrol, diesel, and Aviation Turbine Fuel (ATF) starting June 1(இந்தியாவில் மாற்றி அமைக்கப்படும் பெட்ரோல் டீசல் விலை): Petrol Diesel tax latest news in tamil.