பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்கிய இந்தியா? திடீரென கிளம்பிய கரும்புகை.. மிக முக்கிய தகவல்

  • டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களுக்கு பயன்படுத்தும் கிரானா ஹில்ஸ் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. இது அப்போதே பெரும் பரபரப்பை கிளப்பியிருந்த சூழலில், இது தொடர்பாக முன்னாள் முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    கடந்தாண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்திய சூழலில், பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. தொடர்ச்சியாக இந்தியா நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.

    Advertisement

    அணுசக்தி கட்டமைப்பு

    அப்போது பாகிஸ்தானின் பல்வேறு இலக்குகளையும் குறிவைத்து இந்தியா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. அப்போது பாகிஸ்தானின் அணுசக்தி கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கிரானா ஹில்ஸ் என்ற இடத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த கிரானா ஹில்ஸ் பாகிஸ்தானின் சர்கோதாவிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அந்த மலைப்பகுதியில் இருந்து புகை கிளம்பும் காட்சிகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டன. அதைத் தொடர்ந்தே இந்தியா அந்த மலையை குறிவைத்து தாக்குதல் நடத்தியதா என்ற கேள்வி எழுந்தது. அப்போதே இந்திய பாதுகாப்பு படையினரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். இருப்பினும், அப்போது நேரடியான விளக்கத்தை அதிகாரிகள் அளிக்கவில்லை.

    Advertisement

    என்ன நடந்தது

    இந்த சூழலில் தான் விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய அனில் சவுகான் இது குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சர்கோதா பகுதியில் ரேடார்களை தேடும் வகையில் இந்தியா ஆயுதங்களை பயன்படுத்தியதாக தெரிவித்தார். அவர் மேலும், "தாக்குதல் நடத்தும் முன்பு, தகவல்களை சேகரிக்க சர்கோதாவை நாங்கள் சில டிரோன்களை பயன்படுத்தியிருந்தோம்.

    இந்த டிரோன்கள் சுமார் இரண்டு மணி நேரம் வரை வானில் இருந்தபடி இலக்கை தேட முடியும். இலக்கை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவை கீழே விழுந்து அழிந்துவிடும்.. அப்படி தான் கிரானா ஹில்ஸ் பகுதியில் இந்திய ஆயுதம் விழுந்திருக்கலாம். அதனால் தான் அங்கு புகை கிளம்பியிருக்கும்" என்றார். அதாவது கிரானா ஹில்ஸ் அல்லது அங்குள்ள அணுசக்தி மையங்களை இந்தியா வேண்டுமென்றே குறிவைத்ததாக தெரியவில்லை என்பதையே அவர் குறிப்பிடுகிறார்.

    Advertisement

    தீவிர தாக்குதல்

    மேலும், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் ராணுவ இலக்குகள் மீது இன்னும் தீவிரமான தாக்குதல்களை கூட நடத்த இந்தியா ரெடியாக இருந்ததாகவும் சவுகான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்த நாளில் கூட இந்திய கடற்படை தாக்குதலை தீவிரப்படுத்துவது தொடர்பாக தன்னிடம் பெர்மிஷன் கேட்டதாகவும் சவுகான் குறிப்பிட்டார். அதற்கு முப்படைகளின் தலைமை தளபதி என்ற முறையில் தான் அனுமதி கொடுத்ததாகவும் இலக்குகளை அடையாளம் கண்டு தாக்குதலுக்கு ரெடியான போது வானிலை மோசமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

    வெற்றிக்கு என்ன காரணம்?

    அவர் மேலும் கூறுகையில், "இந்த மோதலில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்தியாவின் வெற்றிக்கு விழிப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் முப்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவை தான் முக்கிய காரணங்கள். ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளும் ஒரே நேரத்தில் செயல்பட்டு, ஒருங்கிணைந்த முடிவுகளை எடுத்தன. தெளிவான அரசியல் வழிகாட்டுதல் ராணுவத்துக்கு முடிவெடுக்கும் சுதந்திரத்தை வழங்கியது" என்று அவர் மோடி அரசையும் பாராட்டினார்.

    Advertisement

    பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் 9 இடங்கள் குறிவைக்கப்பட்டன. அதன் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்து. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மே 10ம் தேதி தாக்குதலை முடித்து கொள்ள பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது.

    English Summary

    Former Chief of Defence Staff General Anil Chauhan has explained what may have happened at Pakistan's Kirana Hills(ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா நடத்திய தாக்குதல்): India attacks over Operation Sindoor latest news in tamil.