டெல்லி: உலகின் உணவு விநியோக சங்கிலிக்கு வரும் மாதங்களில் மிக பெரிய சவால் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. போர்கள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள், முக்கிய மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, அதீத காலநிலை மாற்றம் என ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல நெருக்கடிகள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளன. இதனால் சர்வதேச பொருளாதாரம், குறிப்பாக வளரும் நாடுகளின் பொருளாதாரங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இது குறித்து எச்சரித்துள்ளார். சர்வதேச அளவில் உருவாகி வரும் இந்த நிலை மிக பெரிய உணவு நெருக்கடியாக மாறக்கூடும் என்றும் குறிப்பாக உலக தெற்கு நாடுகள் இதன் கடுமையான தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் போர் மற்றும் ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் தற்போதைய நெருக்கடியின் முக்கிய காரணங்களாக உள்ளன. எண்ணெய் சப்ளை பாதிப்பு, பாதுகாப்பு மற்றும் அரசியல் தொடர்பான பிரச்சினைகள் இணைந்து இரட்டை நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சர்வதேச எரிசக்தி சந்தை மோசமான நிலையில் உள்ளது. புவிசார் அரசியல் காரணங்களால் உலக வர்த்தகத்தில் ஏற்படும் தடைகள் எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. இதேநேரத்தில் கருங்கடல் பகுதியில் நிலவும் மோதல்களால் தானிய ஏற்றுமதி நாடுகளின் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இது முதல் அடி! இது ஒரு பக்கம் இருக்க உரத்தட்டுப்பாடும் பெரிய பிரச்சினையாக மாறும் ஆபத்து உருவாகியுள்ளது. உலகின் முக்கிய உர உற்பத்தி மையங்களில் மேற்கு ஆசியா மற்றும் ரஷ்யாவும் இடம்பெறுகின்றன. தற்போது இந்த பகுதிகளில் நிலவும் மோதல்கள் உர உற்பத்தி மற்றும் சப்ளையை பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை, பாஸ்பேட் உரங்கள் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் சல்பருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டை-அமோனியம் பாஸ்பேட் எனப்படும் டிஏபி உர உற்பத்திக்கு சல்பர் முக்கியமானது. உலகின் 90 சதவீதத்துக்கும் அதிகமான சல்பர் சுரங்கங்களில் இருந்து நேரடியாக எடுக்கப்படுவதில்லை. பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் இயற்கை எரிவாயுவை பிரித்து எடுக்கும் போது சல்பர் துணைப் பொருளாகவே பெருமளவில் கிடைக்கிறது. இதனால் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் சல்பர் விநியோகத்தையும் நேரடியாக பாதிக்கிறது. இப்போதும் அதுவே நடந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக கடல் வழி சல்பர் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சல்பர் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துவிட்டது. ஒரு டன்னுக்கு சுமார் 1,050 முதல் 1,100 அமெரிக்க டாலர் வரை சென்றுள்ளது. இந்தியா தனது தேவைக்கான சல்பரில் 70 சதவீதம் வரையிலும், பாஸ்பேட்டில் 90 சதவீதம் வரையிலும் இறக்குமதியை தான் நம்பியுள்ளது. எனவே மூலப்பொருள் தட்டுப்பாடு விவசாய உற்பத்தியை பாதிப்பதுடன், உர மானியத்துக்கான அரசின் செலவையும் அதிகரிக்கக்கூடும். இது இரண்டாவது அடி! உரம் மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மத்தியில், விவசாயத்துக்கு மற்றொரு சோதனையாக தீவிர காலநிலை மாற்றமும் உருவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் மிகவும் வலுவான எல் நினோ உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. சூப்பர்சைஸ் எல் நினோ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு காரணமாக கடல் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த எல் நினோ இந்தாண்டு உடன் முடிந்துவிடாதாம். இது 2027 பிப்ரவரி வரை கண்டிப்பாக இருக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவுக்கு எல் நினோ மிக பெரிய சவாலாக இருக்கக்கூடும். மழை மற்றும் வெப்பநிலை முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் எல் நினோ, நமது நாட்டில் பருவமழையை கடுமையாக பாதிக்கிறது. மேலும், வறட்சியையும் ஏற்படுத்துகிறது. உர விலைகள் ஏற்கனவே உச்சத்தை நோக்கி செல்லும் நிலையில், பயிர் விளைச்சலும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டால் உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையலாம். இது மூன்றாவது அடி! எரிசக்தி விலை உயர்வு, உரம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, தீவிர வானிலை என பல நெருக்கடிகள் ஒன்றாக உருவாகி வருவதால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதுபோன்ற சிக்கலான சூழலில் பொதுவாகவே முதலீடுகள் வளரும் நாடுகளில் இருந்து வெளியேறி வளர்ந்த பாதுகாப்பான நாடுகளை நோக்கி செல்லும். 2027ஐ நோக்கி நாம் நகரும் நிலையில், இந்தியாவின் விவசாய சங்கிலியும் வளரும் நாடுகளின் உணவு பாதுகாப்பும் கடுமையான சோதனையை எதிர்கொள்ள உள்ளன. உள்நாட்டு கையிருப்பை அதிகரித்தல், பல்வேறு நாடுகளுடன் இறக்குமதி ஒப்பந்தங்களை உருவாக்குதல், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற விவசாய கொள்கைகளை மாற்றுவது ஆகியவை அத்தியாவசியமாக தேவைப்படும்!முதல் சிக்கல்
சல்பர் தட்டுப்பாடு
முந்தைய சம்பளம் ரூ.2.80 லட்சம்னு சொல்லி.. சிஇஓ பதவிக்கே சென்ற 'பலே' கில்லாடி.. ராஜினாமாவின்போது சிக்கியது எப்படி?
இரண்டாவது அடி
மூன்றாவது அடி
6 விநாடிகளில் அப்படியே சரிந்த மலை.. வெள்ளம், நிலச்சரிவால் நேபாளத்தில் பயங்கரம்.. பகீர் வீடியோ
மிக பெரிய ஆபத்து