போராடாமல் வீட்டுக்கு போங்க மாணவர்களே! நேற்று ஆதரவளித்த சல்மான் கான் ‘யூடர்ன்’.. பின்னணியில் மோடி

  • டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சல்மான்கான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று அவர் மாணவர்களே போராட்டம் வேண்டாம். போராட்டத்தை கைவிட்டு ஒவ்வொருவரும் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் ரோல் உள்ளது.

    Advertisement

    'நீட்' முறைகேடு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகர் சல்மான் கான் நேற்று ஆதரவு தெரிவித்து இருந்தார்.

    Advertisement

    இந்நிலையில் தான் இன்று திடீரென்று சல்மான் கான் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளதோடு, போராட்டத்தை கைவிட்டுவிட்டு மாணவர்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக சல்மான் கான் இன்று தனது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களோ அல்லது அவர்களின் பெற்றோரோ இதுபற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை. பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுப்பார் என்று கூறியுள்ளார். அதனை நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே மாணவர்களே, தயவு செய்து தயவுசெய்து உங்கள் பெற்றோரிடமும் வீட்டிற்கும் திரும்புங்கள்," என்று சல்மான் கான் பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    அதேபோல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று சல்மான் கான் கூறியுள்ளார். இதுபற்றி சல்மான் கான், ''சோனம் (சோனம் வாங்சுக்). இது போதும் ப்ரோ. உண்ணாவிரதத்தை நீட்டிக்க வேண்டும். இனி இது தேவையிருக்காது என்று நினைக்கிறேன். உங்களின் மனஉறுதியை இன்னொரு நாளுக்காக வைத்து கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிட நினைத்தால் எனது வீட்டில் இருந்து உங்களுக்கு சாப்பாடு அனுப்பி வைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

    முன்னதாக நேற்றைய தினம் சல்மான் கான் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர், ''இது அமைதியான இயக்கமாக (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்) இருந்தது. ஆனால் இது வன்முறையாக மாறியது கவலையளிக்கிறது. என் இதயத்தில் நினைவுகள் எல்லாம் காயம்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை நினைத்தே இருக்கிறது. வினாத்தாள் கசிவு என்பது மிகவும் தீவிரமான பிரச்சனை. சிறந்த கல்வி முறைக்காக நம் நாட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதையும், அதற்கு அவர்களது பெற்றோர்கள் ஆதரவளிப்பதையும் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    Advertisement

    இந்த நிலைப்பாட்டை நான் மனதார பாராட்டுகிறேன். கடினமாக படித்து எதிர்க்காலத்தில் சிறந்த மற்றும் கல்வியறிவு கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்த போராட்டம். கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இந்தத் தலைமுறை இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும்'' என்று கூறியிருந்தார். ஆனால் திடீரென்று இன்று சல்மான் கான் போராட்டத்தை கைவிடும்படி கூறியதன் பின்னணியில் பிரதமர் மோடி கொடுத்த முக்கிய வாக்குறுதி தான் உள்ளது.

    அதாவது இன்று காலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், ''நம்முடைய இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் நலனை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவான விசாரணை மற்றும் கடும் தண்டனையை உறுதி செய்யும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவெடுத்துள்ளோம்.

    Advertisement

    இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் யாரும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது. '' என்று கூறினார்.

    English Summary

    Salman Khan says that, “The students are at top priority, educationally and security-wise, so they need not worry and have their parents worried for them. The Honorable Prime Minister has tweeted, and I am sure that he will take strict action against all those people who are responsible for this leak. So students, please go back to your parents homes," .