பிஎம் கிசான் திட்டம்.. விவசாயிகளுக்கு நல்ல செய்தி.. இன்று பிரதமர் மோடி விடுவிக்கும் 24வது தவணைத்தொகை

  • டெல்லி: விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகையை பிரதமர் மோடி இன்று விடுக்கிறார். பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்லும் நிலையில், பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு 24வது தவணத்தொகையாக தலா ரு. 2 ஆயிரம் விகிதம் மொத்தம் 18 ஆயிரத்து 680 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் பயணிக்கிறார். அவர் அங்கு ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடி இன்று குஜராத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 2 ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அகமதாபாத் மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

    Advertisement

    இதனை தொடர்ந்து பயணத்தின் 2வது நாளான நாளை சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். மேலும், வல்லபாய் பட்டேலின் 151வது பிறந்தநாள் தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி குஜராத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதனிடையே குஜராத்தில் வைத்து, விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகையையும் பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார் . குஜராத் மாநிலம் பில்டி நகரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு 24வது தவணத்தொகையாக தலா ரு. 2 ஆயிரம் விகிதம் மொத்தம் 18 ஆயிரத்து 680 கோடி ரூபாயை விடுவிக்கிறார். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டும் பிஎம் கிசான் திட்டத்தில் 52.33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1,051 கோடி தவணைத்தொகை விடுவிக்கப்பட இருக்கிறது.

    Advertisement

    விவசாயிகளுக்கான பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியிருந்தது. இந்த திட்டப்படி, சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 23 தவணைகளாக 4.47 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்று 24வது தவணை தொகை விடுக்கப்படுகிறது.

    Advertisement

    ஆதார் எண் இணைப்பு, வங்கி கணக்கு நிலை (Bank Account Status), நிலப் பதிவுகள் (Land Records Verification) ஆகியவை சரியாக உள்ளதா என்பதை விவசாயிகள் சரிபார்த்து வைத்திருந்தால், அக்கவுண்டில் அப்படியே 2000 ரூபாய் வந்துவிடும்.

    English Summary

    Good news for farmers under the PM Kisan scheme: Prime Minister Modi to release the 24th installment today