டெல்லி: ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு இருக்கும் கைது செய்யும் அதிகாரத்தை பறிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சட்ட நடவடிக்கையை தொடங்குவதற்கான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 57 வது கூட்டம் நடந்தது. டெல்லி, கோவா, ஹரியான, ஹம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர்கள், பிற மாநிலங்களை சேர்ந்த துணை முதல்வர்கள், நிதி அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதேவேளையில் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஜிஎஸ்டி அதிகாரிகளுகளுக்கு இருக்கும் கைது நடவடிக்கை தொடர்பான அதிகாரிகள், ரீபண்ட் வழங்கல், பதிவு மற்றும் ரிட்டன் பைலிங் உள்பட பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி ஜிஎஸ்டி வரி அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரம் உள்ளது. இதுபற்றி ஆலோசிக்கப்பட்ட நிலையில் கைது செய்யும் அதிகாரத்தை நீக்குவது தொடர்பாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல் சட்ட நடவடிக்கையை தொடங்குவதற்கான பண வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.