ரோட்டில் பறந்த தீப்பொறி.. பெண் பைக்கர்னு கூட பாராமல் காரை வைத்து மோதிய நபர்! சிக்கிய ஜிம் மாஸ்டர்

  • டெல்லி: டெல்லியை சேர்ந்த பெண் பைக்கர் குர்கிராமில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு பின்னால் வந்த கார் பைக்கில் சென்ற பெண் மீது மோதியது. இதில் அந்த பெண் தூக்கி வீசப்பட்ட நிலையில் பைக்கில் தீப்பொறியுடன் தரையில் இழுத்து செல்லப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    டெல்லியை சேர்ந்தவர் சிவானி சவுகான் என்ற சியா என்ற பெண் 'ஸ்போர்ட்ஸ்' பைக்கில் பயணித்து கொண்டார். பைக்கராக இருக்கும் இவர் பல்வேறு இடங்களுக்கு பைக்கில் சென்று அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவா வெளியிட்டு வருகிறார்.

    Advertisement

    இவர் இன்ஸ்டாகிராமில் rebelwheels_Sia_ என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் சியா தனக்கு தெரிந்த பைக்கர்கள் சிலருடன் ஹெல்மெட், கையுறை உள்பட பிற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து குர்கிராமின் கோல்ப் கோர்ஸ் ரோட்டில் 'ஸ்போர்ட்ஸ்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வெள்ளை நிறத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென்று சியாவின் பைக்கை நோக்கி வந்து பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் சென்ற சியா தூக்கி வீசப்பட்டார் இந்த கோர விபத்தில் சியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் ஹெல்மெட் உள்பட பிற பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்றி இருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பித்தார்.

    Advertisement

    இருப்பினும் அவர் மீது மோதிய கார் நிற்கவில்லை. மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றார். அவர் பைக்கர் என்பாதல் அவரது கேமராவில் இந்த கோர விபத்து தொடர்பான வீடியோ பதிவாகி இருந்தது. அந்த வீடியோ வெளியானது. அதில், சியாவின் பைக்கின் மீது கார் மோதுகிறது. சியா பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுகிறார். கார் மோதிய வேகத்தில் அவரது பைக் ரோட்டில் விழுந்து நீண்டதூரம் தீப்பொறி எழும்ப இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சியா சார்பில் குர்கிராம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வீடியோவும் ஆதாரமாக வழங்கப்பட்டது. ஆனால் போலீசார் முதலில் அலட்சியம் காட்டினார். ஆனால் இந்த வீடியோ இணையதளங்களில் வெளியான நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    Advertisement

    அதன்படி கார் ஓட்டி சியாவின் பைக்கில் மோதியதாக கூறி கல்யாண்பைன்ஸ்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்கார்க் பகுதியில் பதுங்கி இருந்த நிலையில் இன்று போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்து. அதேபோல் அவரது காரில் இருந்த கல்யாண் பைன்ஸ்லாவின் உறவினர லவ்னீஷ் பைன்ஸ்லாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே தான் கல்யாண் பைன்ஸ்லா அளித்த பேட்டியில், ''பைக்கில் சென்றவர் ஆணா, பெண்ணா என்பது எனக்கு தெரியவில்லை. உண்மையில் இந்த சம்பவத்துக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். அந்த பெண்ணிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நான் காரில் சென்றபோது 20 முதல் 22 பைக்கர்கள் பின்தொடர்ந்தனர். அவரகள் என் காரை முந்தி செல்வதும், பிறகு மெதுவாக செல்வது என்றும் சென்றனர்.

    Advertisement

    நான் வேண்டும் என்றே மோதவில்லை. திருப்பத்தில் திரும்ப முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்தால் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்துக்கு என்னுடைய தவறு தான் காரணம். அதற்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன் '' என்றார்.

    ஆனால் கல்யாண் பைன்ஸ்லாவின் வருத்தத்தை சியா ஏற்கவில்லை. இதுபற்றி சியா கூறுகையில், ''கார் ஓட்டி வந்த கல்யாண் பைன்ஸ்லா பைக்கில் சென்ற ஒரு பெண்ணை இடித்து விட்டு சென்றதாக நினைத்து நிற்காமல் வேகமாக சென்றார். இது ஹிட் அண்ட் ரன் கேஸ் மட்டுமின்றி கொலை செய்யும் முயற்சியாகும்.

    என் மீது காரை கொண்டு மோதியதில் அவர் வருத்தப்பட்டால் எதற்காக நிற்காமல் சென்றார். ஒரு விபத்து நேர்ந்தால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்ய வேண்டும். உண்மையில் இந்த சம்பவத்தில் எனக்கு இன்னும் மிகவும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என் எலும்புகள் உடைந்திருக்கலாம். நான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கக்கூட வாய்ப்பிருந்தது. அதிர்ஷ்டவசமாக நான் பிழைத்தேன். இதனால் அவரது வருத்தத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

    Advertisement

    ஏனென்றால் என் மீது மோதிவிட்டு எப்படி தப்பித்து சென்றார்கள் என்பது வீடியோவில் தெளிவாக உள்ளது. கார் கொண்டு மோதிய நபர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று கூட பார்க்காமல் அவர் வேகமாக சென்றார்'' என்று விமர்சனம் செய்துள்ளார்.

    English Summary

    A woman biker from Delhi was riding in Gurugram when a car approaching from behind suddenly struck her. The impact flung the woman off the bike, while the motorcycle itself—emitting sparks—was dragged along the ground. Two people have been arrested in connection with this case, which has sparked widespread shock across the country.