டெல்லி: குருகிராமில் பைக் ஓட்டி சென்ற பெண் ஒருவரை, வேகமாக வந்த கார் வேண்டும் என்றே மோதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இது மிக பெரியளவில் சர்ச்சையான நிலையில், போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹிட் அண்ட் ரன் என்று வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது தான் இந்த நபர் வேண்டும் என்றே வந்து தனது காரை பைக் மீது மோதியிருக்கிறார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அந்த பைக்கில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் மிக தெளிவாக பதிவாகியுள்ளது.
வீடியோவில் பேசியுள்ள அந்த பெண், வெள்ளை நிற காரில் இருந்தவர்கள் தன்னை பாலோ செய்து வந்ததாகவும், கார் ஓட்டுநர் மிகவும் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டியதாகவும் தெரிவித்துள்ளார். முதலில் காருக்கும் தனது பைக்குக்கும் இடையே பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். இருப்பினும், இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் பைக்கை ஓரமாக நிறுத்துமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருந்தது போல் தெரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கார் தொடர்ந்து தன்னை பின்தொடர்ந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். தனது பைக்கை மறித்து பிரச்சினை செய்வார்கள் என பயந்த அந்த பெண், வேகமாக பைக்கை ஓட்டியுள்ளார். இதற்கிடையே அவருடன் வந்த மற்றொரு பைக்கர் காரில் இருந்து அந்த பெண்ணை பாதுகாக்க முயன்றுள்ளார். அப்போது தான் திடீரென தாறுமாறாக வந்த கார், பக்கவாட்டில் இருந்து அந்த பெண்ணின் பைக் மீது மோதியுள்ளது. அதிவேகமாக வந்து கார் மோதியதில் அந்த பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அவரது பைக் சாலையில் பல மீட்டர் தூரம் சறுக்கி சென்றதுடன், உராய்வு காரணமாக தீப்பொறிகளும் பறந்தன. மற்றொரு பைக்கரின் ஹெல்மெட் கேமராவிலும் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த பர் காரை துரத்தி சென்று, சிக்னலில் ஓட்டுநரிடம் பேச முயன்றுள்ளார். ஆனால் சிக்னலையும் மதிக்காமல் அந்த கார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. இதுவும் அந்த ஹெல்மெட் கேமராவில் பதிவாகியுள்ளது. காயமடைந்த பெண் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது. தாறுமாறாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து காரின் உரிமையாளர் இது தொடர்பாக விளக்மகளித்துள்ளார். காரின் உரிமையாளரான மணீஷ், தான் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், தற்போது ஊரில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அசாமில் தான் பணியாற்றி வருவதாகவும், தனது பள்ளி நண்பர் கல்யாண் என்பவருக்கு இரண்டு நாட்களுக்கு காரை கொடுத்திருந்ததாகவும் அப்போதே இந்தச் சம்பவம் நடந்ததாக கூறியிருக்கிறார். சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகே தனக்கு விஷயம் தெரியவந்ததாகவும் கூறியிருக்கிறார். வீடியோ வைரலானதை தொடர்ந்து குருகிராம் போக்குவரத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோதும் அவர் அங்கு இல்லை. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையே கல்யாணும் இது குறித்து ஆங்கில ஊடகமான விளக்கமளித்துள்ளார். அந்த பைக் கும்பல் தான் தங்கள் காரை ஓவர்டேக் செய்து பிரேக் போட்டு விபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் இதுவே பிரச்சினைக்கு காரணம் என கூறியிருக்கிறார். அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தால் உண்மை தெரிய வரும் எனவும் கூறியிருக்கிறார். மேலும், பைக்கை ஓட்டி சென்றது பெண் என்பது தங்களுக்கு தெரியாது என்றும் விபத்து கூட எதிர்பாராத விதமாகவே நடந்ததாகவும் வேண்டும் என்றே பைக்கில் மோதவில்லை எனவும் கூறியிருக்கிறார்.என்ன நடந்தது
விபத்து
காரின் உரிமையாளர் யார்
விசாரணை
சமாளிப்பு