அசாமில் பயங்கரம்.. பிரபல நகைக்கடை அருகே துப்பாக்கி சூடு! 4 பேர் உயிரிழப்பு.. என்ன காரணம்?

  • கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் பிரபல நகைக்கடை அருகே இன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    Advertisement

    கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை அருகிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தனிப்பட்ட விரோதத்தால் துப்பாக்கி சூடு நடைபெற்றதா? அல்லது கும்பல் மோதலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் அசாம் மாநில காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

    Advertisement

    இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அசாம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுகாத்தி காவல் ஆணையர் பார்த்த சாரதி மஹந்த கூறியதாவது:- துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நான்கு பேரது உடல்களையும் நாங்கள் மீட்டுள்ளோம். மீட்கப்பட்ட உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    எஸ்ஐஆர் சர்ச்சை: தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடா? உச்ச நீதிமன்றத்தில் EC பிரமாணப் பத்திரம்

    காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது" என்றார். காயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    Advertisement

    உயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. கவுகாத்தியில் உள்ள ஹோட்டல் பிலாஸ் இன் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Guwahati shooting: A shooting incident took place today near a popular jewellery store in Guwahati, the capital of the northeastern state of Assam. Four people were killed and several others were injured in the incident.