தலைமை தேர்தல் ஆணையரின் மேட்ச் பிக்சிங் பாஜகவை விட்டு விளாசிய ராகுல் காந்தி!

  • டெல்லி: ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஞானேஷ் குமார் இருக்கும் போது, அவர் பா.ஜ.க.வுக்கு ஆட்களை சேர்க்க பயன்படுத்தப்பட்டார். இப்போது மோடியும், அமித்ஷாவும் அவரை நடுவராக நியமித்து, இந்தியாவின் தேர்தல்களை 'மேட்ச் பிக்சிங்' செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்" என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாஜகவை சாடியுள்ளார்.

    Advertisement

    2019 லோக்சபா தேர்தல் சமயத்தில் தன்னை பாஜக சார்பில் போட்டியிடுமாறு தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ்குமார் அறிவுறுத்தியதாக கேரள முன்னாள் தலைமை செயலாளர் ஐஜி தாம்சன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்துள்ளார்.

    Advertisement

    கேரள முன்னாள் தலைமை செயலாளர்

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. எஸ்.ஐஆர் விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கும். பிற தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்த சூழலில்தான் கேரள முன்னாள் தலைமை செயலாளர் முன்வைத்த குற்றச்சாட்டு புதிய புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஐஜி தாம்சன் கூறியதாவது:- நான் கேரள தலைமை செயலாளாரக கடந்த 2016 ஆம் ஆண்டு பணியாற்றி கொண்டிருந்த போது, ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஞானேஷ் குமார் என்னுடன் சக விமானத்தில் பயணம் செய்தார்.

    Advertisement

    என்னை வற்புறுத்தி கேட்டார்

    அப்போது, பிரதமர் மோடியை பற்றி மிகவும் சிலாகித்து பேசிக்கொண்டு இருந்தார். மேலும் என்னிடம் வெளிப்படையாக பத்தினம் திட்டா தொகுதியில் உங்களுக்கு போட்டியிட விருப்பம் உள்ளதா? என்று கேட்டார். அவர் என்னை மிகவும் வற்புறுத்திக் கேட்டபோதிலும், நான் உடனடியாக அதை மறுத்துவிட்டேன்" என்றார்.

    2019 லோக்சபா தேர்தலில் பத்தினம் திட்டா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அண்டோ ஆண்டனி போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிபிஐ (எம்) சார்பில் போட்டியிட்ட வீணா ஜார்ஜ் இரண்டாம் இடம் பெற்று தோல்வியை சந்தித்தார். பாஜக சார்பில் கே சுரேந்திரன் போட்டியிட்டார். அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 28.95 சதவீத வாக்குகள் மட்டுமே அவர் பெற்றார்.

    Advertisement

    ராகுல் காந்தி விமர்சனம்

    இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஞானேஷ் குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக முதலில் பணியில் இருந்த போது, பா.ஜ.க.வுக்கு ஆட்களை சேர்க்க பயன்படுத்தப்பட்டார். பின்னர் மோடியும், அமித்ஷாவும் அவரை நடுவராக நியமித்து, இந்தியாவின் தேர்தல்களை 'மேட்ச் பிக்சிங்' செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்" என்று சாடியுள்ளார்.

    ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள கேரள பாஜக தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:- "ஊழல் மற்றும் திருப்தி படுத்தும் அரசியல், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை, வேலை வாய்ப்பு இன்மை போன்றவை காரணமாக காங்கிரசை மக்கள் நிராகரித்தார்கள். ஜனநாயகத்தை பாதுகாக்கவே எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன" என்றார்.

    English Summary

    Rahul Gandhi has criticised Chief Election Commissioner Gyanesh Kumar over an alleged offer to former Kerala Chief Secretary Jiji Thomson to contest the election on a BJP ticket, raising questions about the Election Commission’s neutrality.