பெண் போலீசை தொடக்கூடாத இடத்தில் தொட்ட ராகுல் காந்தி? பாஜக வெளியிட்ட வீடியோ

  • டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லியில் இன்று 'இந்தியா' கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது பெண் போலீசை பிடித்து தரையில் தள்ள ராகுல் காந்தி முயன்றதாக, தொடக்கூடாத இடங்களை தொட்டதாக பாஜக வீடியோ வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.

    Advertisement

    'SIR' சர்ச்சையில் இந்திய தலைமை தேர்தல் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி 'இந்தியா' கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் இன்று 2வது நாளாக போராட்டம் நடத்தினர்.

    Advertisement

    முதலில் டெல்லியில் உள்ள ஹோட்டலில் அனைத்து எம்பிக்களுக்கும் மல்லிகார்ஜுன கார்கே விருந்து வழங்கினார். அதன்பிறகு அவர்கள் நேரடியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடிவு செய்து பஸ்களில் பயணித்தனர்.

    அப்போது போலீசார் அவர்களின் பஸ்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட எம்பிக்கள் பஸ்களில் இருந்து இறங்கி சாலையிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த சமயத்தில் போலீசார் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடைசியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    இதற்கிடையே தான் ராகுல் காந்தி பெண் போலீசிடம் தவறாக நடந்து கொண்டதாக பாஜகவினர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தொடக்கூடாத இடத்தில் ராகுல் காந்தி தொட்டதாக பாஜகவினர் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    சாலையில் படுத்த பிரியங்கா காந்தி.. ராகுல் தலைமையில் டெல்லியை திணறடித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது

    இதுதொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளது. ''ரீல் உருவாக்கும் ஆர்வத்தில் ராகுல் காந்தி பெண் போலீசை தரையில் தள்ள முயன்றுள்ளார்'' என்று குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதேபோல் பாஜகவின் இன்னொரு செய்தி தொடர்பாளருமான கவுரவ் பாட்டியா வெளியிட்டுள்ள பதிவில், ''இந்த வீடியோவில் ராகுல் காந்தி பெண் போலீஸ் அதிகாரியிடம் தொடக்கூடாத இடங்களை வேண்டுமென்றே தொடுவது தெரிகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடுமையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தி கண்டிப்பாக பொதுவெளியில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுவெளியில் மரியாதையுடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.இந்த சம்பவத்துக்கு உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

    மேலும் பாஜகவை சேர்ந்த தஜிந்தர் பக்கா தனது எக்ஸ் பக்கத்தில், ''பெண் போலீஸ் அதிகாரியை தவறான இடத்தில் தொட்டது என்பது அவமானத்துக்குரியது. இதன்மூலம் அரசியலில் எந்த பதவியும் பெண்ணை தவறான இடத்தில் தொடுவதற்கான உரிமையை தருவது இல்லை. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

    English Summary

    Rahul Gandhi: Members of the ‘INDIA' bloc staged a protest in Delhi today demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar. The BJP has released a video criticizing Rahul Gandhi, alleging that he attempted to grab a policewoman and push her to the ground during the protest.