கைவிரித்த தலைமை நீதிபதி.. ராகுல் காந்தி அதிரடி.. ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லியில் இன்று பேரணி

  • டெல்லி: எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அரசியலை அதிர வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் 2 ஆணையர்களே எஸ்ஐஆர் பணிகளில் மோசடி நடைபெற்றதாக போர் கொடி தூக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக எதிர்த்து போராடுகின்றன. டெல்லியில் இன்று ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தவுள்ளனர். ராகுலை சந்திக்க உச்ச நிதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி மறுத்துள்ளார். அதையும் மீறி உச்ச நீதிமன்றம் வரை ராகுல் தலைமையில் பேரணி நடைபெறவுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முன்னதாக பீகார் மாநிலத்திலும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தமான எஸ்ஐஆர் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். தற்போது தேர்தல் ஆணையத்திற்குள்ளும் இது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது

    Advertisement

    தீவிரமடையும் போராட்டம்

    தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி எஸ்ஐஆர் குளறுபடி குறித்து ஆட்சேபனை தெரிவித்தனர். 14 முறை எழுத்து பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய வாக்காளர் இணைப்பு, பழைய வாக்காளர்களை நீக்குதல், மேல்முறையீடு, ஷாப்ட்வேர், பார்ம் 6 திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அந்த புகாரை கண்டுகொள்ளவில்லை

    இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணைய செயல்பாட்டில் மத்திய பாஜக அரசின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கரப்பான் பூச்சி ஜனதாதளம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Advertisement

    தலைமை நீதிபதி மறுப்பு

    நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சிஜேபி கட்சியினர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தது பெரும் சர்ச்சையானது. மத்திய அரசுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள், இளைஞர்கள், சமூக அமைப்புகள் டெல்லியில் பேரணி நடத்தவுள்ளனர். உச்ச நீதிமன்றம் வரை பேரணி சென்று தலைமை நீதிபதி சூரியகாந்தை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

    வாக்கு திருட்டை தடுக்க வேண்டும், எஸ்ஐஆருக்கு தடை விதிக்க வேண்டும், ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர். ஆனால் ராகுலின் கோரிக்கையை ஏற்க சூரியகாந்த் மறுத்துவிட்டார். ராகுலை சந்திக்கவும் அவர் மறுத்துள்ளார். எஸ்ஐஆர் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்று கூறி தலைமை நீதிபதி மறுத்துள்ளார்.

    Advertisement

    ராகுல் தலைமையில் பேரணி

    தலைமை நீதிபதி சந்திக்க அனுமதி மறுத்தாலும் பேரணி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திட்டமிட்டபடி இன்று மதியம் ராகுல் காந்தி தலைமையில் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த தீவிர முன்னெடுப்பு பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதனால் டெல்லியில் இன்று பரபரப்பான சூழல் ஏற்படும்.

    English Summary

    SIR Gyanesh kumar issue Opposition parties head by Rahul Gandhi to involve Rally in Delhi. However SC Chief Justice Refused to meet.