டெல்லி: எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ராகுல் காந்தி, திக் விஜய் சிங், ஓவைசி உள்பட பல்வேறு நபர்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், சக தேர்தல் ஆணையர்களான சுக்பிர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி சில முடிவுகளை ஞானேஷ் குமார் தன்னிச்சையாக எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தி, திக் விஜய் சிங், ஓவைசி உள்பட பல்வேறு நபர்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்குகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் செய்தித்தாள்களில் வந்த செய்தியின் அடிப்படையிலேயெ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் மூன்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஜூன் 2025, அக்டோபர் 2025 , மே 2026 ஆகிய மூன்று உத்தரவுகள் பிறப்பிக்கட்ட நிலையில், மூன்றுமே ஒரு மனதாகவே எடுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறையில், அதிகாரிகள் தெரிவிக்கும் பரிந்துரைகள், கருத்துகள், மாறுபட்ட பார்வைகள் மற்றும் கேள்விகள் அனைத்தும் பரிசீலிக்கப்படுகின்றன. எனவே, தேர்தல் ஆணையர்களின் கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒரு கோப்பு பரிசீலனையில் இருக்கும்போது தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர்கள் தெரிவிக்கும் கருத்துகள், கேள்விகள் அல்லது பரிந்துரைகளை ஆணையத்தின் இறுதி முடிவாகக் கருத முடியாது. தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு பிரிவும் தயாரிக்கும் கோப்புகள் முதலில் ஒரு தேர்தல் ஆணையருக்கும், பின்னர் மற்றொரு தேர்தல் ஆணையருக்கும் அனுப்பப்படும். கடைசியாகத்தான், தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிசீலனைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இவ்வாறு ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட கோப்புகளில் பதிவு செய்யப்படும். இதில், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின் கையொப்பமும் இருக்கும். அதன்பிறகு, தேர்தல் ஆணையச் செயலகம் , எடுக்கப்பட்ட முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு நடைமுறைக்கு கொண்டு வரும்" என்று தெரிவித்துள்ளது.Election Commission: தேர்தல் ஆணைய சர்ச்சை.. தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?
வாக்காளர் பட்டியல் சர்ச்சை: காரணமே சொல்லாமல் 61,000 பெயர்களை நீக்கிய அதிகாரிகள்! ECI தந்த ஷாக்