ஹலோ அங்கிள்.. ராகுல் காந்திக்கு பிடித்த பாஜக தலைவர் யார் தெரியுமா? மாமா-னு தான் கூப்பிடுவாராமே

  • டெல்லி: இன்ஸ்டாகிராமில் Gen - Z தலைமுறை மாணவர்களுடன் Ask Me Anything என்ற பெயரில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது ஒருவர், ''பாஜகவில் உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல் காந்தி, ''அமரிந்தர் சிங் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். வணக்கம் அமரிந்தர் அங்கிள்'' என்று கூறினார். இந்த பாஜக இருக்கும் அமரிந்தர் சிங் யார்? ராகுல் காந்திக்கும் அவருக்குமான உறவு எப்படி? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறது. இவர் அவ்வப்போது பொது இடங்களிலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி இளைஞர்கள், இளம்பெண்களிடம் கலந்துரையாடல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் தான் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Gen Z மாணவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். Ask Me Anything என்று அவர் கலந்துரையாடினார். இதில் ஏராளமானவர்கள் ராகுல் காந்தியிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    ஒருவர், ''பாஜகவில் உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். அதில், ''நிச்சயமாக, கேப்டன் அமரிந்தர் சிங் தான் எனக்கு பிடிக்கும். அவருடன் எனக்கு நல்ல உறவு .ள்ளது. அவர் கலகலப்பானவர். அதோடு ராணுவம் பற்றிய விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அதனால் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். வணக்கம் அமரிந்தர் அங்கிள்'' என்று கூறியுள்ளார்.

    Advertisement

    ராகுல் காந்தி கூறிய அமரிந்தர் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவர் மகாராஜா குடும்பத்தை சேர்ந்வர். இவரது தந்தை யதவிந்திர சிங் தான் பஞ்சாப் பட்டியாலா சமஸ்தானத்தின் கடைசி மகாராஜா ஆவார். அமரிந்தர் சிங் முதலில் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றினார். இதனால் கேப்டன் என்று புனைப்பெயர் பெற்றார். இதனால் அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். காங்கிரஸில் எம்பி, எம்எல்ஏ, அமைச்சராக இருந்தவர்.

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக 3 முறை பணியாற்றினார். 2002 முதல் 2007 ம் ஆண்டு வரையும், 2017 முதல் 2021 வரையும் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக 2 முறை செயல்பட்டார். அதன்பிறகு உள்கட்சி மோதலால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு அவர் 2022ம் ஆண்டு தனது கட்சியை அமரிந்தர் சிங் பாஜகவில் இணைத்தார். தற்போது பாஜகவில் இயங்கி வருகிறார்.

    Advertisement

    அமரிந்தர் சிங்கும், முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தியும் பள்ளி கால தோழர்கள். இருவருக்கும் இடையே நீண்ட நெடிய பந்தம் உள்ளது. இதனால் தான் அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை ராகுல் காந்தியின் குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தவர். இதனால் ராகுல் காந்தி அவரை 'அங்கிள்', 'அங்கிள்' என்று அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Lok Sabha opposition leader Rahul Gandhi says his "Favourite" BJP Leader on Instagram Ask Me Anything with Gen Z Students. He says, ‘‘Captain Amarinder Singh, definitely. I get along with him, he's cool and he is an expert on military history, so I like him quite a lot. Hello, Uncle Amarinder".